"அலைக்கழிக்கும் அமித் ஷா... ஆளுநர் பதவி விலக வேண்டும்" - கொதித்து பேசிய டிஆர் பாலு!

 
டிஆர் பாலு

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி ஆட்சிக்கு வந்த பிறகும் சரி நீட் விலக்கு பெறுவதில் உறுதியாக உள்ளது. அதன்படி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநர் நீட் விலக்கு தீர்மானத்தை இதுவரை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கவில்லை. இதுகுறித்து நேரில் சென்று வலியுறுத்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க திமுக மற்றும் அதன் தோழமை கட்சி எம்பிக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். 

tr

ஆனால் ஒன்பது நாட்களாகியும் அவர்களைச் சந்திக்காமல் அலைக்கழிக்கிறார் அமித் ஷா. முதல் இரண்டு முறை அவரைச் சந்திக்க நேரில் சென்றபோது கடைசி நிமிடத்தில் எம்பிக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இன்று மூன்றாவது முறையாக நேரில் சென்றும் கடைசி நேரத்தில் சந்திக்க முடியாது என அமித் ஷா அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்துள்ளார். இதையடுத்து இன்று தலைநகர் டெல்லியில் பேட்டியளித்த திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, "நீட் தேர்வு விலக்கு அளிப்பது தொடர்பான மசோதா நிலுவையில் இருப்பதற்குத் தமிழக ஆளுநர் தான் பொறுப்பு. இதற்காக ஆளுநர் பதவி விலகவேண்டும். 

Nagaland, Governor RN Ravi meet PM Modi | MorungExpress | morungexpress.com

அரசியல் காரணங்களுக்காகத் தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்களைச் சந்திக்க மறுக்கிறார் என்று நினைக்கிறேன். ஆளுநர் தமிழகத்துக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறார். அடுத்ததாக இந்த குழு உறுப்பினர்கள் பிரதமரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஆளுநர் நாங்கள் எழுதிக்கொடுத்த உரையைப் பேசியுள்ளார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், நீட் தேர்வு விவகாரத்தில் அவர் போதிய அக்கறை காட்டவில்லை. காலம் தாழ்த்துவது அவரின் பிரதான நோக்கமாக இருக்கிறது" என்றார். முன்னதாக இன்று காலையில் தமிழக சட்டப்பேரவையிலிருந்து விசிக எம்எல்ஏக்கள் இந்தக் காரணத்துக்காகவே வெளிநடப்பு செய்தனர்.