பா.ஜ.க.விலிருந்து மம்தா கட்சிக்கு தாவிய ராஜீப் பானர்ஜியின் வி.ஐ.பி. பாதுகாப்பு வாபஸ்.. மத்திய அரசு நடவடிக்கை

 
ராஜீப் பானர்ஜி

பா.ஜ.கவிலிருந்து மம்தாவின் கட்சிக்கு தாவிய ராஜீப் பானர்ஜிக்கு அளித்து வந்த மத்திய பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரசிலிருந்து பல எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் பா.ஜ.க.வுக்கு தாவினர். அதேபோல் கடந்த ஜனவரியில் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த ராஜீப் பானர்ஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு, திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மற்றும் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்தார்.

பா.ஜ.க.

ராஜீப் பானர்ஜிக்கு மத்திய அரசு வி.ஐ.பி. பாதுகாப்பு அளித்து இருந்தது. கடந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் ஹவுரா மாவட்டத்தில் உள்ள டோம்ஜூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் கல்யாண் கோஷிடம் தோல்வி அடைந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் ராஜீப் பானர்ஜி பா.ஜ.க.விலிருந்து விலகி மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.

திரிணாமுல் காங்கிரஸ்

இந்த சூழ்நிலையில், ராஜீப் பானர்ஜிக்கு அளித்து இருந்த மத்திய பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய ரிசர்வ் போலீஸ் படை அளித்து வரும் பாதுகாப்பை வாபஸ் பெறுமாறு ராஜீப் பானர்ஜியே கோரிக்கை விடுத்தாகவும், அதன் பிறகுதான் மத்திய அரசு அவருக்கு அளித்த பாதுகாப்பை திரும்ப பெற்றுள்ளதாக தகவல்