சாரி தம்பி.. நாம ஒரே சாதி.. அந்த அம்மா யாருன்னே எனக்கு தெரியாது -சூர்யாசிவாவிடம் மன்னிப்பு கேட்ட வரிச்சியூர் செல்வம்
வரிச்சியூர் செல்வத்திடம் மன்னிப்பு கேட்டார் திருச்சி சூர்யா என்று பரபரப்பாக செய்திகள் வெளிவந்த நிலையில், திருச்சி சூர்யா சிவாவிடம் தான் வரிச்சியூர் செல்வம் மன்னிப்பு கேட்டார் என்பதற்கான ஆதாரத்தை சூர்யா சிவா வெளியிட்டார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து நடிகை காயத்ரி ரகுராம் பேசி வரும் நிலையில் , அண்ணாமலையின் ஆதரவாளர் திருச்சி சூர்யா சிவா இதற்கு பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி அன்று வரிச்சியூர் செல்வத்துடன் காயத்ரி ரகுராம் இருக்கும் போட்டோவை வெளியிட்டு, ’’நீயும் இப்படி எங்க போன வந்த என்பதும் எல்லோருக்கும் தெரியும். ராத்திரி அதுவும் ரவுடி கூட தோப்புல உனக்கு என்ன வேலை. நீதானே போட்டோ -வீடியோ கேட்டுக்கிட்டே இருந்த. இதுக்கு மேலயும் ஏதாச்சு பேசுனா, இதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் வெளியில வரும் . பெண்களுக்கு உரிமை தேடித் தர மூஞ்சிய பாரு’’ என்று பதிவிட்டு இருந்தார் சூர்யா சிவா.
இதுகுறித்து வரிச்சியூர் செல்வத்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘’ஒரு நாள் ஓட்டலில் சாப்பிடுவதற்காக போனேன். மாஸ்டர் கணேஷ் வந்தார். அவருடன் ஒரு ஐந்து ஆறு பேர் வந்திருந்தார்கள். அப்போ என் கூட வந்து போட்டோ எடுத்துக் கொண்டார் காயத்ரி. அவ்வளவுதான் மற்றபடி வேறொன்றும் இல்லை . இது தொடர்பாக திருச்சி சூர்யா கிட்ட பேசினேன். அவர் என்கிட்ட சாரி கேட்டாரு. நான் தெரியாமல் பதிவு போட்டு விட்டேன் என்றார். ஏம்பா இப்படி எல்லாம் போடலாமா? அந்த பொண்ணு யாருன்னு தெரியாது . போட்டோ தான் எடுத்தது. இது ஒரு குத்தமா ஐயா என்று கேட்டேன். உடனே மன்னிப்பு தெரிவித்து இருந்தார்’’என்று சொல்ல,
இந்த விவகாரம் பரபரப்பாக ஊடகங்களில் வரிச்சியூர் செல்வத்திடம் மன்னிப்பு கேட்டார் சூர்யாசிவா என்று பரவ, இது குறித்து விளக்கம் அளிக்க சூர்யா சிவா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த போது, நான் காயத்ரி ரகுராம் வரிச்சியூர் செல்வத்தை சந்தித்தது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தேன். அதற்கு வரிச்சியூர் செல்வத்திடம் திருச்சி சூர்யா மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வருகிறது. ஆனால் உண்மையில் வரிச்சியூர் செல்வம் தான் என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்று கூறி அதற்கான ஆதாரமாக சூரிய சிவாவிடம் தன்னிடம் வரிச்சியூர் செல்வம் பேசிய ஆடியோவை ஒளிபரப்பினார்.
அதில், ‘’ தம்பி சூர்யா முதல்ல உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். தம்பி.. வயசுல நீ சின்னவனா இருந்தாலும் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால அதை எடுத்திருப்பா என்று நான் கேட்டுக் கொண்டதால் அதை எடுத்தீங்க . நான் உங்களிடம் அழுத்தம் கொடுத்து எடுக்கச் சொல்லவில்லை. அப்படி அழுத்தம் கொடுத்து எடுக்கச் சொன்னாலும் அப்படியே அதற்காக செய்கிற ஆள் நீங்கள் இல்லை என்பது எனக்கு தெரியும். அன்பால தான் எடுத்தீங்க.
பேட்டி கொடுக்கும் போது ஒரு வார்த்தை தவறுதலாக சூர்யா மன்னிப்பு கேட்டார் என்று சொல்லிவிட்டேன். அதை எல்லா டிவிகளையும் பார்த்து, தெரியாமல் சொல்லிட்டேன் மன்னிச்சுக்கோங்க தம்பி. அப்படி நான் ஒரு வார்த்தை பேசினதுக்கு. தெரியாம பேசிட்டேன் தம்பி. அதனால நீங்க எதுவும் வருத்தப்படாதீங்க தம்பி. இப்பவும் சொல்றேன் என் தம்பி.. காயத்ரி ரகுராம் அந்த அம்மாவை யாருன்னு எனக்கு தெரியாது. அது எனக்கு பெரிய விஷயமும் கிடையாது. சூர்யா என்னோட ஜாதிக்காரர் சொந்தக்காரர். அது போக உங்க அப்பா எனக்கு 30, 40 வருஷமா பழக்கம் தம்பி. நீங்க எதையும் மனசுல வச்சுக்காதீங்க தம்பி மனச கஷ்டமா இருக்கு சாரி தம்பி மன்னிச்சுக்கோங்க தம்பி.’’ என்கிறார்.
மேலும் சூர்யா சிவா, எதெயச்சையாக காயத்ரி ரகுராம் சந்தித்தார் என்கிறார். அது எதேச்சையாக நடந்த சந்திப்பு அல்ல திட்டமிட்டு நடந்த சந்திப்புதான். திருமாவளவனுக்கும் காயத்ரி ராம் அவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் காயத்ரி ரகுராமுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தார்கள் . அப்படி இருந்தும் அன்று இரவு காயத்ரி ரகுராம் எங்கு சென்றார் என்பது போலீசுக்கு தெரியாது. கணேஷ் என்கிற நடிகர் தான் காயத்ரி ரகுராமை வரிச்சியூர் செல்வத்திடம் அழைத்துச் சென்று இருக்கிறார் என்கிறார் சூர்யா சிவா.