“ரஜினியை பார்த்ததுக்கு அப்பறம்தான் சீமானின் நிலைப்பாடு மாறி இருக்கிறது”- நாதகயில் இருந்து விலகிய வெற்றிக்குமரன் பேட்டி

நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்து, ’தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம்’ என தனி இயக்கம் நடத்தி வந்த வெற்றிக்குமரன் உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிக்குமரன், “சீமானின் மோசமான நிர்வாக திறமையால் நாம் தமிழர் கட்சி அழிந்துவருகிறது. சீமான் சொந்த வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள மட்டுமே இந்த கட்சியை பயன்படுத்துகிறார். கட்சியில் உள்ளவர்களின் உழைப்பையும் பொருளாதாரத்தையும் தனது சொந்த வாழ்க்கைக்காக சுரண்டிவருகிறார். சீமானிடம் நிர்வாக திறன் இல்லை. தான் என்ற அகங்காரம் உள்ளது. வெல்லப்போற கட்சித் தலைவருக்கான தகுதி சீமானிடம் இல்லை.
எப்போதும் அனைவரும் நம்மை பற்றியே பேச வேண்டும் என்ற மனநோய் அவருக்கு உள்ளது. 20-க்கும் மேற்பட்ட வாக்கு விழுகாட்டில் இருக்க வேண்டிய கட்சி, எட்டு சதவீதம் வாக்குகளை பெற்றிருப்பதே தோல்விதான். ஹெச்.ராஜாவை பேரறிஞர் என்று கூறி இருப்பதன் மூலமாகவே அவர் யாரின் பின்புறத்தில் இயங்கி வருகிறார் என அறிந்து கொள்ளலாம். சீமான் பின்புலத்தில் யார் இருக்கிறார் என்பது விரைவில் வெளிவரும். ரஜினியை பார்த்ததுக்கு அப்பறம்தான் சீமானின் நிலைப்பாடு மாறி இருக்கிறது. திருந்துவாருன்னு காத்துக்கிட்டு இருந்தோம் இதுக்குமேல தாக்குப்பிடிக்க முடியாது” என்றார்.