வெல்லப்போவது யார்? சர்வே முடிவுகள்

 
bய்

 ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சி வெல்லப்போகிறது? எந்த கட்சிக்கு எந்த அளவு செல்வாக்கு உள்ளது? மக்கள் ஆதரவு யாருக்கு உள்ளது? இளைஞர்கள் வாக்கு எந்த கட்சிக்கு அதிகம் உள்ளது? என்பது குறித்து சர்வே கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.   மக்கள் ஆய்வு அமைப்பு நடத்திய இந்த கருத்து கணிப்பு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளார் பேராசிரியர் ச. ராஜநாயகம் .

எ

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.  காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக உள்ளார் . அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியில் மேனகா வேட்பாளராக போட்டியிடுகிறார். தேமுதிக வேட்பாளர் ஆனந்த் களத்தில் உள்ளார்.  சுயேட்சிகள் உட்பட மொத்தம் 77 பேர் வேட்பாளராக களத்தில் உள்ளனர்.   இதில் காங்கிரஸ் அதிமுக இடையே தான் கடும் போட்டியிலே வருகிறது.

 நாளையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது.  இறுதி கட்ட பிரச்சாரத்தை முன்னிட்டு வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர்.   இந்த நிலையில் பேராசிரியர் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வு மையம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.   இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெறுவார் என்று கூறுகிறது.

செ

 காங்கிரஸ் கட்சி 39.5% வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.  அடுத்த இரண்டாவது இடத்தில் 24.5% வாக்குகளுடன் அதிமுக உள்ளது.  மூன்றாவது இடத்தில் ஒன்பது புள்ளி ஐந்து சதவீத வாக்குகளுடன் நாம் தமிழர் கட்சி உள்ளது.  இரண்டு சதவீத வாக்குகளுடன் தேமுதிக நான்காவது இடத்தில் உள்ளது. 

 காங்கிரஸ் கட்சி 65% வாக்குகளும் , அதிமுக 41% வாக்குகளும்,  நாம் தமிழர் கட்சி 17 சதவிகித வாக்குகளும் , தேமுதிக நான்கு சதவிகித வாக்குகளும் பெறும் என்று அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.   இளம் வாக்காளர்களின் வாக்குகள் 29.5% நாம் தமிழர் கட்சிக்கும்,  28.5% காங்கிரஸ் கட்சிக்கும்,  17 சதவிகிதம் அதிமுகவுக்கு மூன்று சதவிகிதம் தேமுதிகவுக்கும் கிடைத்திருக்கிறது.

 மக்கள் ஆய்வகத்தில்  முறையான பயிற்சி பெற்ற இரண்டு ஆய்வு நெறியாளர்கள்,  45 களத் தகவல் சேகரிப்பாளர்கள் இணைந்து பிப்ரவரி 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் நடத்திய கள ஆய்வுகளின் முடிவுகள் தான் இது .  இந்த முடிவுகள் இடைத்தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா  என்பதே கேள்வி.