அடுத்து அரசியல்தான்! பிரம்மாண்ட எண்ட்ரி கொடுக்கப்போகும் லெஜெண்ட் சரவணன்!

 
a

சினிமாவுக்குள் நுழைந்த பலரின் எண்ணம் அரசியலாகத் தான் இருக்கிறது.   அதுவும் ஒரு படத்தில் நடித்து விட்டாலே அவர்களுக்கு அரசியல் கனவு குறிப்பாக முதல்வர் நாற்காலி கனவு வந்துவிடுகிறது சகஜமாகிவிட்டது.  அந்த வகையில் தான் தி லெஜன்ட் படத்தில் நடித்த அருள் சரவணன் அரசியலுக்கு வருவதாக தெரிவித்திருக்கிறார்.

 ஒரு படத்தில் தான் நடித்தாலும்  அருள் சரவணன் மக்களிடையே பிரபலமாக இருக்கிறார்.  அதற்கு காரணம் அவர் தொழிலதிபர் . சரவணா ஸ்டோர் என்கிற பிரம்மாண்ட நிறுவனத்தின் மூலம் மக்களிடையே புகழ் பெற்றிருந்தார்.  அதன் மூலமாக தி லெஜன்ட் என்கிற திரைப்படத்தில் நாயகனாக நடித்து மக்களிடையே இன்னும் பிரபலமானார். 

ar

தனது சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் விளம்பரப் படங்களில் நடிக்க ஆரம்பித்த அவர் அதன் மூலம் ஏற்பட்ட உந்துதலில் திரையுலகில் நடிகராகவும் நாயகனாகவும் அறிமுகமானார்.  அந்த படம் பெரிதாக வசூல் செய்யவில்லை என்றாலும் மக்களிடையே ஒரு பெயரை தந்திருக்கிறது அருள் சரவணனுக்கு.

 இந்த நிலையில் கோவையில் கோல்ட் வின்ஸ்  பகுதியில் கலை ரசனை உள்ளவர்களுக்காக தொடங்கப்பட்டு இருக்கிறது நூர் பிரைடல் ஸ்டுடியோ.  இதை லெஜன்ட் சரவணன் திறந்து வைத்தார் . அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,   கலைத்துறையில் உள்ளவர்களுக்கு மேக்கப் துறை முக்கிய பங்கு வைக்கிறது. அதை முழுமையாக நேசித்து சேவை செய்து வருகிறார் நூர் முகமது.  அதனால் தான் எனக்கு பல்வேறு நிகழ்வுகளுக்கு அழைப்பு இருந்தாலும் பெரும்பாலான நிகழ்வுகளுக்கு நான் செல்வதில்லை.  இங்கே வந்திருக்கிறேன்.  கோவை மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றவரிடம்,

அடுத்து என்ன படம் ? யார் இயக்குனர்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப,   ’’கதை ரெடி ஆகி கொண்டிருக்கிறது.  விரைவில் என்ன படம் யார் டைரக்டர் என்று அறிவிப்பேன் என்றார்.

 திரை உலகில் நுழைந்தவர்களின் அடுத்த கனவு அரசியலாகத் தான் இருக்கிறது.  நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப,  அதை மக்களும் மகேசனம் தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் கூப்பிட்ட வருவேன் என்றார் சரவணன்.

அவர் சொல்வதை வைத்து பார்க்கும்போது விரைவில் பிரம்மாண்டமாய் அரசியலுக்குள் அடியெடுத்து  வைக்கப்போகிறார் என்று தெரிகிறது.