எடப்பாடி அதிரடி நீக்கம் - ஓபிஎஸ் தரப்பு ஏற்படுத்திய பரபரப்பு
ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து பன்னீர்செல்வம் நீக்கம். அந்த பதவியே காலாவதியாகிவிட்டது. நமது அம்மா நாளிதழ் நிறுவனர் பொறுப்பிலிருந்து ஓபிஎஸ் நீக்கம், அடுத்து பொருளாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு கட்சியைவிட்டு நீக்கப்படுகிறார் என்று எடப்பாடி தரப்பு தொடர்ந்து அதிரடி விலை கொடுத்து வந்து கொண்டிருக்கும் நிலையில் பதிலடியாக ஓபிஎஸ் தரப்பும் ஒரு சம்பவம் செய்திருக்கிறது.
’’அதிமுக அறிவிப்பு.. ஓபிஎஸ் அவர்களை வணங்கி கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு தவறுகள் செய்த காரணத்திற்காக எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் கேபி முனுசாமி ,ஜெயக்குமார், சிவி சண்முகம் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து 26.6. 22 அன்று முதல் நீக்கப்படுகிறார்கள். கழக தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது’’ என்று ஓபிஎஸ் ஆதரவாளர் மிசா செந்தில் மதுரையில் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.