தமிழகத்தில் திட்டமிட்டபடி 2021 சட்டமன்ற தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும் – பொன்.ராதாகிருஷ்ணன்

 

தமிழகத்தில் திட்டமிட்டபடி 2021 சட்டமன்ற தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும் – பொன்.ராதாகிருஷ்ணன்

2021 சட்டமன்ற தேர்தல் திட்டமிட்ட படி நடத்த வேண்டும் என்பதுதான் எனது கருத்து, முறைப்படி சட்டமன்ற தேர்தலை நடத்துவது நல்லது என பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போது நம் நாட்டிற்கு ஏற்பட்டு உள்ள மிகப்பெரிய சவால் கொரோனா, கொரோனாவை தடுக்க சுய சார்பு இந்தியா திட்டம் மூலம் பல லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பலன் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு பின்புதான் தெரிய வரும். டிக் டாக் ஆப்புக்கு தடை செய்த செயல் மகிழ்ச்சி அளிக்கிறது, இதற்கு மாற்றாக தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் திருச்சியை சேர்ந்த இளைஞர்கள் புதிய ஆப் ஐ உருவாக்கி உள்ளனர். இளைஞர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கிறது சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கிறது என்பது டிக் டாக் விஷயத்தில் தெரிகிறது.

தமிழகத்தில் திட்டமிட்டபடி 2021 சட்டமன்ற தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும் – பொன்.ராதாகிருஷ்ணன்
கொரோனா தொற்று யாரும் கணிக்க முடியாத அளவிற்கு சென்று கொண்டு இருக்கிறது, கொரோனா வை ஒழிக்க அடிப்படையான தேவை சுய கட்டுப்பாடு. எனவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கட்டாயம் தேவை. கொரோனா தொற்றால் அமைச்சர்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டியது இல்லை. இதில் அரசியல் செய்யவும் தேவையில்லை. 2021 சட்டமன்ற தேர்தல் திட்டமிட்ட படி நடத்த வேண்டும் என்பதுதான் எனது கருத்து, முறைப்படி சட்டமன்ற தேர்தலை நடத்துவது நல்லது. தனியார் பள்ளிகளில் 3 கட்டமாக கல்வி கட்டணத்தை வசூல் செய்யலாம் எனக்கூறி இருப்பது மக்களை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.