ராகுலின் தமிழ்வணக்கம் #RahulinThamizhVanakkam

 

ராகுலின் தமிழ்வணக்கம் #RahulinThamizhVanakkam

அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை காண ராகுல்காந்தி இன்று மதுரை வருகிறார்.

இதை முன்னிட்டு அவரை மதுரை விமான நிலையத்தில் வரவேற்க, பெருந்திரளாக அணி திரள்வோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கட்சி்யினருக்கு அறிவித்திருக்கிறார்.

ராகுலின் தமிழ்வணக்கம் #RahulinThamizhVanakkam

மேலும், தமிழர்களின் பண்பாட்டை போற்றுகிற வகையில் ராகுல்காந்தி் பயணம் அமைந்திப்பதை பெருமைப்படுத்துகிற வகையில் அணி, அணியாக திரண்டு வரும்படி காங்கிரஸ் நண்பர்களை அன்போடு அழைக்கிறேன் என்றும் கே.எஸ்.அழகிரி, கட்சியின்ரை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்தியாவின் பன்முகத்தன்மையையும், கலாச்சாரத்தையும், பெரிதும் மதிக்கிற பாரம்பரியத்தில் வந்த தலைவர் ராகுல்காந்தி, தமிழர்களின் வீர விளையாட்டை நேரில் கண்டு மகிழ்வதற்காகவே வருகை புரிகிறார். தமிழர்களின் நாகரீகம், பண்பாட்டினை போற்றுகின்ற வகையில் ராகுல்காந்தி வருகை அமைந்திருக்கிறது சிறப்பு என்கிறார் கே.எஸ்.அழகிரி.

ராகுல்காந்தியின் தமிழக வருகையை முன்னிட்டு, #RahulinThamizhVanakkam #ராகுலின்_தமிழ்வணக்கம் என்ற ஹேஷ்டேக்குகளை காங்கிரசார் டிரெண்டாக்கி வருகிறார்கள்.

ராகுலின் தமிழ்வணக்கம் #RahulinThamizhVanakkam