முதுகலை நீட் தேர்வு தொடங்கியது!!
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டயாமாக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்தி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக முதுகலை நீட் தேர்வு தள்ளிப் போனது.
இதையடுத்து கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், செப்டம்பர் 11 ஆம் தேதி முதுகலை நீட் நுழைவு தேர்வும், இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதியும் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது.இந்நிலையில் எம்.டி., எம்.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கான முதுநிலை நீட்தேர்வு தமிழகம் உட்பட நாடு முழுவதும் தொடங்கியுள்ளது.
மருத்துவ கல்லூரிகளில் 30 ஆயிரம் இடங்களில் சேர்வதற்கான நீட் PG தேர்வை சுமார் 1.74 லட்சம் பேர் எழுதுகின்றனர்.ஏப்ரல் 18ல் நடைபெறவிருந்த தேர்வு கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு இன்று நடத்தப்பட்டு வருகிறது. 260 நகரங்களில் உள்ள 800 மையங்களில் நடக்கும் தேர்வு முடிவு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.