• February
    18
    Monday

Main Area

Main

ஜிக்னேஷ் மேவானிக்கு அனுமதி மறுப்பு; பதவியை ராஜினாமா செய்த கல்லூரி முதல்வர்

jigneshmevani
jigneshmevani
Loading...

ஆமதாபாத்: கல்லூரி நிகழ்ச்சிக்கு ஜிக்னேஷ் மேவாணியை சிறப்பு விருந்தினராக அனுமதிக்க முடியாது என்ற நிர்வாகத்தின் முடிவை கண்டித்து கல்லூரி முதல்வர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் மற்ற சமூக மக்களின் குரலை ஒலிக்க இளம் தலைமுறையினர் கிளம்பிய போது, தலித் மக்கள் தங்களது குரலை ஒலிக்க செய்ய இளம் தலைமுறை ஒன்றை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் எழுந்த எழுச்சி குரல் தான் ஜிக்னேஷ் மேவானி. இவர் ஒரு முன்னாள் பத்திரிகையாளர். வழக்கறிஞரான இவர், சமூக போராளி என பன்முகத்தன்மை கொண்டவர்.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சையாக வட்காம் தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றவர் ஜிக்னேஷ் மேவானி. மோடி அரசுக்கு எதிராகவும், தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து இளைஞர்களின் எழுச்சி நாயகனாக இருப்பவர்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் செயல்பட்டு வரும், ஹெச்கே கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜிக்னேஷ் மேவாணியை அழைக்க அக்கல்லூரியின் முதல்வர் ஹமந்த்குமார் ஷா முடிவு செய்து, நிர்வாகத்தின் அனுமதியை கோரியுள்ளார். ஆனால், அரசியல் சூழ்நிலைகளை காரணம் காட்டி அவரை அழைப்பதற்கு கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனால், கடுப்பான முதல்வர் ஹமந்த்குமார் ஷா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த மாணவர்கள் இயக்கம் கொடுத்த மிரட்டல் காரணமாகவே ஜிக்னேஷ் மேவானியின் வருகை மறுக்கப்பட்டதாக தனது ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஹமந்த்குமார் ஷாவுக்கு ஆதரவாக துணை முதல்வர் மோகன்பாய் என்பவரும் ராஜினாமா செய்துள்ளார். இவர்கள் இருவரும் அக்கல்லூரியில் தலா 15, 10 ஆண்டுகள் பனி புரிந்துள்ளனர். இதுகுறித்து ஹமந்த்குமார் ஷா கூறுகையில், அப்படி என்ன அரசியல் சூழ்நிலை தடையாக இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக-வின் அழுத்தம் காரணமாகவே ஜிக்னேஷ் மேவானிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.