• May
    26
    Sunday

Main Area

Main



கடும் குளிரை கூட பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் மோகன்லால் செய்த செயல்! நெகிழும் படத்தின் இயக்குநர்!

மோகன்லால்
மோகன்லால்
Loading...

சென்னை: ரஷ்யாவில் லூசிபர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை படத்தின் இயக்குநர் ப்ரித்வி ராஜ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மலையாள சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'லூசிபர்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தை நடிகர் ப்ரித்வி ராஜ் இயக்கியுள்ளார்.

இப்படம் வசூல் மட்டும் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் ரஷ்யாவில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இயக்குநர் ப்ரித்வி ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் 'மோகன்லால் மண்ணு முட்டைகளை சுமந்து செல்கிறது போல் இடம்பெற்றுள்ளது'. இது பற்றி அவர் கூறுகையில் 'படப்பிடிப்பு வேலைக்காக -16 டிகிரி செல்ஷியஸ் குளிர் நிலையில்,மோகன்லால் 20 கிலோவிற்கு அதிகமான மணல் மூட்டையை தூக்கி சென்றுள்ளார். அவர் நினைத்தால் நெருப்புடன் கூடிய கூடாரத்தில் அமர்ந்திருக்கலாம், ஆனால் அவர் எங்களுடன் இருந்து உதவி செய்யவே நினைத்தார்' என்று கூறியுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.