• July
    18
    Thursday

Main Area

Main



100 மணி நேரத்தில் பழி தீர்ப்பு; ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத தலைமை காஷ்மீரில் முழுவதுமாக அழிப்பு

பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய ராணுவ அதிகாரிகள்
பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய ராணுவ அதிகாரிகள்
Loading...

காஷ்மீர்: புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத தலைமை காஷ்மீரில் முழுவதுமாக அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது குறி வைத்து தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ- முகமது இயக்க மூத்த தளபதி கம்ரான் உள்பட 3 தீவிரவாதிகள் காஷ்மீரில் சுமார் 16 மணி நேரம் நடந்த என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். சரணடையுங்கள் அல்லது நீங்கள் கொலை செய்யப்படுவீர்கள் என புல்வாமா என்கவுண்டருக்கு பின்னர் தீவிரவாதிகளுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத தலைமை காஷ்மீரில் முழுவதுமாக அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.