• July
    21
    Sunday

Main Area

Main



தில்லியில் ஸ்லீப்பர் செல்களை நிறுவ ஜெய்ஷ்-இ-முகமது முயற்சி; அதிர்ச்சி தகவல்!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Loading...

புதுதில்லி: புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரின் நெருங்கிய நண்பரை தில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது குறி வைத்து தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை தடை செய்ய வேண்டும் எனவும், அதன் தலைவர் மசூத் அசாரை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பான ஆதாரங்களை இந்தியா வழங்கியுள்ள போதிலும், அதனை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

pulwama

இதையடுத்து, புல்வாமா தாக்குதலுக்காக வெடிகுண்டுகளை தயாரித்து திட்டம் தீட்டி மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் முத்சர் அகமது கான் என்பவரை ஜம்மு-காஷ்மீரின் டிரால் பகுதியில் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் முத்சர் என்பவரின் நெருங்கிய நண்பரும், ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதியுமான சாஜாத் கான் (27) என்பவரை தில்லியின் லஜ்பத் ராய் சந்தையின் அருகே வைத்து நேற்றிரவு போலீசார் கைது செய்துள்ளனர். தில்லியில் ஸ்லீப்பர் செல்களை நிறுவ முத்சர் அகமது கானால் சஜாத் கான் பணியமர்த்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.