• February
    18
    Monday

Main Area

Main

66 ஆண்டுகளுக்குப் பிறகு விரல் நகங்களை வெட்டிய முதியவர்!

nail
nail
Loading...

புனே: உலகிலேயே மிக நீளமான விரல் நகங்களை கொண்ட நபர் 66 ஆண்டுகளுக்குப் பிறகு தனது விரல் நகங்களை வெட்டியுள்ளார்.

உலகின் மிக நீளமான விரல் நகங்களை கொண்ட மனிதர் என்ற கின்னஸ் சாதனையை ஸ்ரீதர் சிலல் என்ற 82 வயது முதியவர் கடந்த 2016-ஆம் ஆண்டு படைத்தார். புனேவைச் சேர்ந்த ஸ்ரீதர் சிலல் 1952-ஆம் ஆண்டு முதல் நகம் வெட்டுவதை நிறுத்தியுள்ளார். அதாவது சுமார் 66 வருடங்களாக தனது விரல் நகங்களை வெட்டாமல் அவர் மிகவும் கவனமாக வளர்த்துள்ளார். இந்த கின்னஸ் சாதனையை படைப்பதற்காக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாக ஸ்ரீதர் சிலல் கூறியுள்ளார்.

இந்நிலையில், 66 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீதர் சிலல் தனது விரல் நகங்களை வெட்டியுள்ளார். இதற்காக இவர் புனேவில் இருந்து நியூயார்க் சென்றுள்ளார். டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள ரிப்லைஸ் பிலீவ் இட் ஆர் நாட் (Ripley's Believe It or Not) என்ற அருங்காட்சியத்தில் இவரின் நகங்கள் வெட்டிப் பாதுகாக்கப்பட உள்ளன. இதையடுத்து ஸ்ரீதர் சிலலின் விரல் நகங்கள் வெட்டப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்ரீதர் சிலலின் நகங்கள் வெட்டப்படும்போது 909.6 செ.மீ நீளம் இருந்ததாம்.

2018 TopTamilNews. All rights reserved.