• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

நிர்வாண புகைப்பட சர்ச்சை: பி.ஆர்.ஓ-வை பாராட்டிய ராதிகா ஆப்தே!

radhikaapte

மும்பை: ‘கபாலி’ நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் லீக்காகி பெரும் சர்ச்சை வெடித்தபோது தனக்கு பலமாக இருந்த பி.ஆர்.ஓ-வை ராதிகா ஆப்தே பாராட்டியுள்ளார்.

பாலிவுட்டில் பிரபல நடிகையான ராதிகா ஆப்தே, தமிழில் கார்த்தியுடன் ‘அழகுராஜா’ மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘கபாலி’ போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் குறும்படம் ஒன்றில் நடித்தபோது எடுக்கப்பட்ட ராதிகா ஆப்தேவின் நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் லீக்கானது.

radhikaapte

அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இவ்விவகாரத்தில் நடிகை ராதிகா ஆப்தே எவ்வித கருத்தும் கூறாமல் அமைதியாக இருந்தார். தற்போது அது குறித்து மனம் திறந்துள்ளார். இந்த பிரச்னையை பெரிதுப்படுத்தாமல், கருத்து ஏதும் கூறாமல் அமைதியாக இருக்கும்படி பி.ஆர்.ஓ பிரதாப் என்பவர் கேட்டுக் கொண்டார்.

அவரது ஆலோசனையின்படி அமைதியாக இருந்ததால் அந்த பிரச்னை என்னை பெரிதாக பாதிக்கவில்லை. அவரிடம் இருந்து பொறுமையை கற்றுக் கொண்டேன். பிரதாப் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது என்றும் ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

             
2018 TopTamilNews. All rights reserved.