• April
    24
    Wednesday

Main Area

Main



ரஃபேல் விவகாரம்: மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

ரபேல் விவகாரம்
ரபேல் விவகாரம்
Loading...

பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனமும் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பு பணியை கவனிக்கிறது.

fgdzf

ஆனால், பிரான்ஸ் - இந்தியா இடையேயான ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். விமானம் வாங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலை அதிகம், டசால்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் டிபென்சை, ஒப்பந்தத்தில் சேர்த்தது தவறு என ராகுல் கூறி வருகிறார்.

dhgfh

ஆனால், எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளை பாஜக அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது. எனினும், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

zzvcxv

இதனிடையே, ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் விசாரணை நடத்துவதற்கும், நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்தவிதமான முறைகேடும் இருப்பதாகத் தெரியவில்லை என அந்த மனுக்களை தள்ளுபடி செய்தது.

zvzxbzb

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் சார்பில் சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், ரஃபேல் விவகார ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என கூறியதுடன், பத்திரிகையில் வெளியான ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையையும் நிராகரித்தது.

 

இதையும் வாசிக்க: அதிமுக விஞ்ஞானி தெர்மகோல் ராஜூ; கலாய் ட்வீட்டின் மூலம் பதிலடி தந்த குஷ்பூ

2018 TopTamilNews. All rights reserved.