திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம்- ராகுல்காந்தி

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம்- ராகுல்காந்தி

தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை ஏற்றுக்கொள்கிறோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிரடியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. 3 நாட்கள் பயணமாக தமிழகம் வந்த அவர் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று தனது பிரச்சாரத்தை கரூரில் நிறைவு செய்துவிட்டு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம்- ராகுல்காந்தி

இந்நிலையில் பரப்புரைக்கு நடுவே அரவக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, “திமுக காங்கிரஸ் இடையே சுமுகமான உறவு நீடிக்கிறது. மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம். திமுகவுடன் நல்லுறவு தொடர்கிறது. கருணாநிதி மற்றும் ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை தமிழகத்தில் புகுத்த முயற்சிக்கிறார்கள். அதை தடுக்கவே நான் தமிழகம் வந்தேன்” என தெரிவித்தார்.