• March
    24
    Sunday

Main Area

Main



எலும்போ,கொழுப்போ இல்லாத இந்த சுக்காவை நீங்கள் மூன்று பிளேட் அடித்தாலும் எளிதில் செரித்துவிடும்! ராஜபாளையம் கூரைக்கடை ஸ்பெஷல்!

ராஜபாளையம் கூரைக்கடை
ராஜபாளையம் கூரைக்கடை
Loading...

முப்பது வருசமிருக்கும் ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் கருப்பசாமி ஒரு ஓலைக் கொட்டகை போட்டு உணவகம் தொடங்கி! சின்னக்கொட்டகையில் சூடான கறிக்குழம்புடன் கருப்பசாமி போட்ட சோறுதான் அவருக்கு பப்ளிசிட்டி.

இத்தனைக்கும் விருதுநகர், ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று பக்கத்து ஊர்களில் அப்போது பல புகழ் பெற்ற உணவகங்கள் இருந்தும், இந்த முப்பது வருடத்தில் கருப்பசாமியின் உணவகம் வளர்ந்து பெரிய கான்கிரீட் கட்டிடமாகிவிட்டது. 

ஓட்டலுக்கு பெயர்பலகை ஒன்றும் இல்லாததால் அடையாளத்துக்கு கூரைக்கடை என்று மக்கள் அழைக்க துவங்கி,அதுவே பெயராக நிலைத்துவிட்டது.இப்போதும் அதன் பெயர் கூரைக்கடைதான்.அதற்காகவே வாசலில் சிறியதாக கூரை வேய்ந்திருக்கிறார்கள்.

rajapalayam kooraikadai

தென்மாவட்டங்களில் செய்யப்படும் மசாலாக்களில் ராஜபாளையம் மசாலா மிகவும் வித்தியாசமான சுவை கொண்டது.அதிகம் காரமும் இருக்காது.
மட்டன் சாப்பாடு,மீன் சாப்பாடு,சிக்கன் சாப்பாடு என்று மூன்று வகையான சாப்பாடுகள் கிடைக்கும்.மட்டன் சாப்பாட்டுடன் தரப்படும் மட்டன் சுக்காதான் கூரைக்கடையின் சூப்பர்ஸ்டார்.

சிறு துண்டுகளாக வெட்டிய எலும்போ,கொழுப்போ இல்லாத இந்த சுக்காவை நீங்கள் மூன்று பிளேட் அடித்தாலும் எளிதில் செரித்துவிடும்.அதுதான் கருப்பசாமியின் மசாலா மகத்துவம்.இதைவிட்டால்,மீன் சாப்பாடு, இங்கே மட்டன் சாப்பாடு,சிக்கன் சாப்பாட்டை விட மீன் சாப்பாடு விலை அதிகம்.

rajapalayam kooraikadai

நெய்மீன் என்கிற ஒரு நன்னீர் மீன் வறுவலும்,அயிரை மீன் குழம்பும்தான் இந்த விலை வித்தியாசத்துக்கு காரணம் காலை,மாலை சிற்றுண்டிகளும் உண்டு, அவையெல்லாம் வழக்கமாக எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடியவைதான்.ஆனால் உங்கள் கண்ணெதிரில் கங்கு அடுப்புகளில் கொதித்துக்கொண்டு இருக்கும் குழம்பு வகைகளை கொதிக்க கொதிக்க ஊற்றும் சுவையை அனுபவிக்க வேண்டுமானால் மதிய உணவுக்கு போக வேண்டும். 

உணவகத்தின் உள்ளேயும் பக்கவாட்டிலும் அறைகள் இருந்தாலும் பரந்த வராண்டாவில் அமர்ந்து சட்டையின் மேல் பட்டனைக் கழற்றிவிட்டு ஆர்டர் செய்யுங்கள்.உங்கள் நாக்குக்கு அதுதான் சொர்க்கம்!

2018 TopTamilNews. All rights reserved.