• July
    18
    Thursday

Main Area

Main



சர்ச்சையான மதவாத பேச்சால் சிக்கிய கமல்!! - ஆள விடுங்க என விலகிய ரஜினி!!

ரஜினிகாந்த்- கமல் ஹாசன்
ரஜினிகாந்த்- கமல் ஹாசன்
Loading...

அரவக்குறிச்சியில் நடந்த பிரச்சாரத்தில் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என சர்ச்சையாக பேசி பல எதிர்ப்புகள் கண்டனங்களை சந்தித்து வருகிறார் கமல்.

இந்தியாவில் 2019 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி துவங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடத்த முடிவு செய்து, மே 12ஆம் தேதி வரை 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துவிட்டன. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி காலியாக இருந்த 21 சட்டமன்ற தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால், 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரி உட்பட 40 மக்களவை தொகுதிகளின் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதன் வாக்குப்பதிவுகள் என்னும் பணி மே 23ஆம் தேதி துவங்கி அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் முன்னமே அறிவித்த ஒன்றே.

kamal

இந்நிலையில், மீதமுள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும், சூலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பில் உயிரிழந்ததால் அந்த தொகுதியும் காலி என அறிவிக்கப்பட்டு மொத்தம் 4 தொகுதிகளுக்கு வருகின்ற மே 19ஆம் தேதி இரண்டாவது கட்ட இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்க்கு தீவிர வாக்கு சேகரிப்பில் அந்தந்த கட்சியின் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார் அக்கட்சியின் தலைவர் மற்றும் நடிகர் கமல்ஹாசன்.

அப்போது அவர் பேசுகையில், நமது நாட்டின் மூவர்ணக்கொடியில் உள்ள மூன்று விதமான வர்ணங்களும் நமக்கு பலவற்றை உணர்த்துகின்றன. அதில் மிக முக்கியமான ஒன்று, பல்வேறுபட்ட பிரிவுகளாக நாம் வாழ்ந்தாலும் நமக்குள் நிலைத்து இருக்க வேண்டியது சமநிலை தான். சமநிலையோடு இங்குள்ள மக்கள் அனைவரும்  வாழ வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு நல்ல இந்தியர்களின் விருப்பமாக இருக்கும். உங்கள் முன்னிலையில் நான் ஒரு நல்ல இந்தியன் என பெருமையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

குறிப்பாக, அரவக்குறிச்சியில் முஸ்லீம்கள் அதிகமாக இருக்கும் பகுதியில் பேசிய அவர், "இந்த இடம் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதால் நான் இதை சொல்லவில்லை. ஆனால், சமநிலை மற்றும் அகிம்சையை விரும்பிய நிலைநாட்டிய மகாத்மா காந்தியின் சிலைக்கு முன்னால் நின்று இதை சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சே இந்துதான்" என்றார். 

கமலின் இந்த மதவாத மற்றும் சர்ச்சையான பேச்சுக்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்புகளும் கண்டனங்களும் தெரிவித்துள்ளன. 

kamal hassan

கமலின் இந்த பேச்சு குறித்து சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்திடம் நிருபர்கள் கேட்கையில், அவர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டு, ஆள விடுங்கடா சாமி! என்ற பாணியில் நகர்ந்தார்.

2018 TopTamilNews. All rights reserved.