• July
    16
    Tuesday

Main Area

Main



‘2.0’ புரொமோஷனில் பங்கேற்கிறாரா ரஜினி?

2point0
2point0
Loading...

சென்னை: மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தின் ரிலீசையொட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷங்கர் இயக்கத்தில் சுமார் ரூ.516 கோடி பட்ஜெட்டில் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ‘2.0’ திரைப்படம் வரும் நவ.29ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படம், போட்ட பணத்தை எடுக்க தீவிரமாக முயற்சித்து வருகிறது.

சமீபகாலமாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீசில் சரியாக போகாததால், இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து ரஜினிகாந்த், ப்ரஸ் மீட்டில் பங்கேற்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

2point0

தன் படங்களின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்ற கட்டுப்பாடை வைத்திருக்கும் ரஜினிகாந்த், தனது திரை பயணத்தில் ‘2.0’ முக்கியமான படம் என்பதை உணர்ந்து புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும், இப்படத்திற்கு கடும் போட்டியாக ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோன் நீண்ட இடைவெளிக்குப் பின் நடித்துள்ள ‘க்ரீட் 2’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் ரிலீசாகி வசூல் வேட்டையாடி வருகிறது. இதனால், இந்த வார இறுதியில் வெளியாகவிருக்கும் ‘2.0’ திரைப்படத்தின் வசூலுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சமும் தயாரிப்பாளர் தரப்பில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.