• October
    17
    Thursday

Main Area

Main



எந்திரனின் வாழ்நாள் சாதனையை ஒரே நாளில் துவம்சம் செய்த ‘2.0’?

2point0
2point0

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படத்தின் வாழ்நாள் வசூல் சாதனையை ‘2.0’ திரைப்படம் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் மாஸாக வெளியானது. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த சமூக தகவலை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

2point0

இந்தியாவில் அதிக பொருட் செலவில் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தில், ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் நாள் வசூல் இதன் முதல் பாகத்தை காட்டிலும் அதிகம் என கூறப்படுகிறது.

கடந்த 2010ம் ஆண்டு ஷங்கர்-ரஜினி கூட்டணியில் வெளியான ‘எந்திரன்’ திரைப்படம் திரையரங்குகளில் ஓடி மொத்தமாக வசூலித்த ரூ.20 கோடியை, ஒரே நாளில் அதற்கும் மேலாக ‘2.0’ திரைப்படம் வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் வெளியான ‘2.0’ திரைப்படம் ஒரே நாளில் ரூ.20.25 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

endhiran

இதுவரை ‘மெர்சல்’, ‘பாகுபலி’, ‘சர்கார்’ படங்களின் முதல் நாள் வசூலையும் ‘2.0’ திரைப்படம் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.