• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

உலக பாக்ஸ் ஆபீஸில் ரூ.500 கோடி வசூலித்து ‘2.0’ அசுர சாதனை

2point0

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலித்து அசுர சாதனை படைத்துள்ளது.

லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் மாஸாக வெளியானது. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த சமூக தகவலுடன் ரோபோட்டிக்ஸை இணைத்து சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக வெளியாக ‘2.0’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்தியாவில் அதிக பொருட் செலவில் அதிநவீன 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தில், ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘2.0’ திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலகளவிலான பாக்ஸ் ஆபீஸில் ரூ.500 கோடி வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.

உலகளவிலான பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் இணைந்த இந்திய திரைப்படமான ‘2.0’, 12வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு அமீர்கான் நடித்த ’தூம் 3’ படத்திற்கு அடுத்த இடத்தில் ரஜினிகாந்தின் ‘2.0’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

ஒரு வார இறுதியில் ரூ.500 கோடி வசூலித்துள்ள ‘2.0’ திரைப்படம் இனி வரும் நாட்களில் இதுவரை ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்த அமீர்கானின் ‘பிகே’, ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’, சல்மான் கானின் ‘பஜ்ராங்கி பாய்ஜான்’, ‘பாகுபலி’ படங்களின் வரிசையில் விரைவில் ‘2.0’ திரைப்படம் இணையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

             
2018 TopTamilNews. All rights reserved.