• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

அம்பேத்கர் சிலைக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

ambthkar

டெல்லி: அண்ணல் அம்பேத்கரின் நினைவுதினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் அவரது சிலைக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவர், இறக்கும் காலம் வரை சமூக நீதிக்கு குரல் கொடுத்தவர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரரான அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.  

இதனையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையின் பீடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்  அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல் துனை குடியரசுத்தலைவர்வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

             
2018 TopTamilNews. All rights reserved.