குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

தமிழக ஆளுநராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று காலை 2 நாட்கள் பயணமாக டெல்லி சென்றார். அங்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்துப் பேசினார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, கடந்த 18-ம் தேதி பதவியேற்றார். ஆளுநராகப் பதவியேற்றதும் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.என்.ரவி, அரசியலமைப்புச் சட்டப்படி செயல்படுவேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று முன்தினம், ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின்போது தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம், கடலோரப் பாதுகாப்பு பற்றி பல்வேறு விவரங்களைக் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. பதவியேற்ற பிறகு முதல்முறையாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினார். வழக்கமாக ஏதேனும் மாநிலத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டால், குடியரசு தலைவரை மரியாதை நியமித்தமாக சந்திப்பது வழக்கம். அவ்வகையில் ஆளுநர் ரவியின் சந்திப்பும் நிகழ்ந்துள்ளது.

தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்துப் பேச இருப்பதாக கூறப்படுகிறது.