• July
    17
    Wednesday

Main Area

Main



தளபதி 64 அப்டேட்: முதல் முறையாக தளபதி விஜய்யுடன் இணைந்த தெலுங்கு பட நடிகை! 

விஜய்
விஜய்
Loading...

சென்னை: தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 64வது படத்தில் கதாநாயகியாகத் தெலுங்கு பட நடிகை ரஷ்மிக்கா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் விஜய் தற்போது தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்துவரும் இப்படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர். 

படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தளபதி விஜயின் அடுத்த படத்தை பற்றிய செய்திகள் உலா வரும் நிலைய தொடங்கியுள்ளது. 

தளபதி 64 படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில்,இதில் கதாநாயகியாக  நடிகை ராஷ்மிகா இணைய உள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது. இவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து இரண்டு வெற்றி படங்களைக் கொடுத்துள்ளார்.  

rashmika

மேலும் ராஷ்மிகா, விஜய் குறித்த வதந்திகள் பரவுவது இது முதன்முறை அல்ல. ஏற்கனவர் தளபதி 63 படத்தில் ராஷ்மிகா நடிக்க உள்ளார் என்று வதந்தி பரவியது. அந்த தகவலை மறுத்த ராஷ்மிகா, இம்முறை அவருடன் நடிக்கவில்லை, ஆனால் விரைவில் அவர் படித்தில் நடிப்பேன் என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில் தற்போது ராஷ்மிகா குறித்து வெளியான தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

2018 TopTamilNews. All rights reserved.