• April
    24
    Wednesday

Main Area

Main



அப்பா காங்கிரஸ், மனைவி பாஜக ; குழப்பத்தில் ரவிந்திர ஜடேஜா

ரவிந்திர ஜடேஜா
ரவிந்திர ஜடேஜா
Loading...

ரவிந்திர ஜடேஜா தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

அவரது குடும்பத்தில் அரசியல் குளறுபடி ஏற்பட்டுள்ளது. ரவிந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத்சிங் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல, அவர் ஜாம்நகர் (குஜராத்)  தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட உள்ளார். ஜடேஜாவின் தங்கை நைனாவும் காங்கிரஸில் இணைந்திருக்கிறார்.

பாஜகவில் இணைந்த ரவிந்திர ஜடேஜாவின் மனைவி

fsfsfg

ஜடேஜா மனைவி ரிவா சோலன்கி தீவிர பாஜக ஆதரவாளர், கடந்த மார்ச் 3-ஆம் தேதி அவர் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பாவுக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் வருமோ என்ற குழப்பத்தில் உள்ளார் ரவிந்திர ஜடேஜா.

ravindra

ஏப்ரல் 11-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு துவங்கியது. ஏப்ரல் 23-ஆம் தேதி மூன்றாம் கட்டமாக குஜராத்துக்கான வாக்கு பதிவு துவங்கவுள்ளது.

கிரிக்கெட் வீரர்களும் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களும் அரசியல் கட்சிகளில் இணைவது புதிதல்ல. சமீபத்தில் கவுதம் காம்பீர் பாஜகவில் இணைந்தார், அதேபோல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின் முகமது அசார், நவ்ஜத் சிங் சித்து, முகமது கைப் ஆகியோர் அரசியல் கட்சிகளில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்க:  காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு, ஆண்கள் கொடுத்த கொடூர தண்டனை: வைரல் வீடியோ!

2018 TopTamilNews. All rights reserved.