• May
    23
    Thursday

Main Area

Main



ரியல்மி யு1, ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை அதிரடியாக குறைப்பு!

real
real
Loading...

மும்பை: ரியல்மி யு1, ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரியல்மி யு1, ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறைக்கப்பட்ட புதிய விலையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்களை வாங்க முடியும். ஹோலி சேல் என்ற சிறப்பு விற்பனையின் படி மார்ச்.13 முதல் மார்ச்.15 வரை மேற்கண்ட ரியல்மி ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஓப்போ ஸ்பின்ஆஃப் மூலம் ரியோல்மி பேக்குகள் ரூ.1-க்கு முதல் 50 வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

ரூ.10,999 விலையில் ரியல்மி யு1 ஸ்மார்ட்போனும், ரூ.11990 விலையில் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனும் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் பழைய விலைகளை ஒப்பிடும்போது ரூ.1000 விலை குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி இன்று இரவு 8 மணிமுதல் ரியல்மி 3 ஸ்மார்ட்போன் ரூ.8,999-க்கு இந்தியாவில் மீண்டும் விற்பனையை தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.