• July
    20
    Saturday

Main Area

Main



மரக்கர் அரபிக்கடலின்டே சிம்மம் பட மேனேஜரை சந்தித்த விஜய் சேதுபதி; காரணம் இதுதான்!

விஜய் சேதுபதி - மரக்கர்
விஜய் சேதுபதி - மரக்கர்
Loading...

ஹைதராபாத்: மோகன் லால் நடிப்பில் உருவாகி வரும் மரக்கர் படத்தின் மேனேஜரை விஜய் சேதுபதி சந்தித்துள்ளார்.

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன் லால், கீர்த்தி சுரேஷ் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் மரக்கர் அரபிக்கடலின்டே சிம்மம் (Marakkar arabikadalinte simham). கடற்படை தலைவர் நான்காம் குஞ்சாலி மரைக்காயர் பற்றிய திரைப்படமாக இது உருவாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டு வருகிறது. மோகன் லால் நடிப்பை நேரில் காண விரும்பிய விஜய் சேதுபதி, படத்தின் புரடக்சன் மேனேஜர் சித்து பனக்கல் இடம் அனுமதி கேட்டுள்ளார். இந்த படக்குழுவினரும் விஜய் சேதுபதியை வரவேற்று இருக்கின்றனர்.

marakkar

விஜய் சேதுபதியை அழைத்து சென்று மோகன் லாலை சந்திக்க செய்திருக்கிறார் சித்து. கேரவனில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதுகுறித்து விஜய் சேதுபதி, நான் மோகன் லாலை கேரவனில் சந்திக்க விரும்பவில்லை. அவர் நடிப்பை பார்த்து நான் நடிப்பை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். இதனால் மோகன் லாலை நினைத்து மலையாள சினிமா பெருமை கொள்கிறது என சித்து பாராட்டியுள்ளார். விஜய் சேதுபதியின் தன்னடக்கம் குறித்தும் அவர் பதிவு செய்திருக்கிறார்.

2018 TopTamilNews. All rights reserved.