காரிய சித்திக்கும், பகையை வெல்லவும், வாழ்வில் வளம் பெறவும் கொங்கணர் சித்தரை வழிபடும் முறைகள்

 

காரிய சித்திக்கும், பகையை வெல்லவும், வாழ்வில் வளம் பெறவும் கொங்கணர் சித்தரை வழிபடும் முறைகள்

கொங்கணர் ஜீவ சமாதி அடைந்தது திருமலையில், பெரிய குன்று அல்லது மலை சதய வடிவம் ஆகும். சதய நட்சத்திரம் கொங்கணருக்கு க்ஷேம தாரை

18 சித்தர்களுள் ஒருவர் கொங்கணர் . இவர் கி.பி 14 ம் நூற்றாண்டில் வாழந்தவர். இவர் யோகக்கலை, மருத்துவம் ஆகியவற்றை பற்றி எழுதியுள்ளார்.

இவரின் நட்சத்திரம் உத்திராடம் ஆகும். இவர் போகரின் சீடர். போகரின் நட்சத்திரம் பரணி ஆகும். இது கொங்கணர்க்கு பரம மித்ரா தாரை( 9 வது நட்சத்திரம் ), நல்வழி தர கூடியது.

கொங்கணர் ஜீவ சமாதி அடைந்தது திருமலையில் . பெரிய குன்று அல்லது மலை சதய வடிவம் ஆகும். சதய நட்சத்திரம் கொங்கணருக்கு க்ஷேம தாரை .

எனவே உத்திராடம், ,கிருத்திகை, உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொங்கணர் தவம் செய்த குகை, மற்றும் அவர் ஜீவ சமாதிக்கு சென்று வழிபட உடல் நலம் பெற்று, பகைவர்களை வெல்லலாம்.

திருவோணம், ரோஹிணி, ஹஸ்தம் நட்சத்திரக்காரர்கள் கொங்கணரை , அவர் சமாதியை வழிபட, நல்வழி பிறக்கும் .

பூராடம் , பரணி, பூரம் நட்சத்திர அன்பர்கள் கொங்கணரை , அவரின் சமாதியை வழிபட சகல சம்பத்தும் கிடைக்கும் .

கேட்டை, ரேவதி, ஆயில்யம் நட்சத்திரகாரர்கள்ள கொங்கணரின் ஜீவ சமாதியை வழிபட, காரிய சித்தி உண்டாகும்.

விசாகம், பூரட்டாதி, புனர்பூசம் அன்பர்கள் இவரை வழிபட, சாதகமான சூழ்நிலை ஏற்படும்.

கொங்கணர் தவம் செய்த குகை அமைந்துள்ள இடங்கள் :

1. தாராபுரம் காங்கேயம் ரோடு, ஊதியூர் மலை கொங்கணர் குகை,

2. கோவை-சேலம் மெயின் ரோடு சங்ககிரி அருகாமை சூரியவனம் கொங்கணர் குகை,

3. திருப்பூர் கொங்கணகிரிமலை போன்றவை கொங்கணர் தவம் செய்த இடங்களாகும்.