கொரோனா பரவல் அதிகரிப்பு : கோவையில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

 

கொரோனா பரவல் அதிகரிப்பு : கோவையில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் கூடுதல் தளர்வுகளுடன் இன்று முதல் வருகின்ற ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் அண்டை மாநிலங்களிலும் மாநிலத்தின் சில பகுதிகளிலும் நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பு : கோவையில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

இந்த சூழலில் கோயமுத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட காவல் ஆணையர் மற்றும் பல்வேறு வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகள் ஆன பால், மருந்தகம், காய்கறி கடைகள் ,தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும்.

கொரோனா பரவல் அதிகரிப்பு : கோவையில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை ,காந்திபுரம் 5,6, ஏழாவது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ்மில் சாலை ,என் பி இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிறு கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அமர்ந்து 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப் படுகிறது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

கொரோனா பரவல் அதிகரிப்பு : கோவையில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளிலும் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி, சில்லரை விற்பனைக்கு அனுமதி இல்லை மற்றும் 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இதனை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளா- தமிழ்நாடு மாநில எல்லைகள் அனைத்தும் சோதனை சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சோதனை சாவடி வழியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட கொரோனா இல்லை என்ற சான்று அல்லது தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்துவதற்கான செலுத்திக்கொண்டு அதற்கான சான்று கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட சான்றுகள் இல்லை எனில் சோதனை சாவடிகளிலும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.மக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களுக்கும் நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அம்மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.