“சென்னையிலிருந்து கடலூர், நாகைக்கு பயணிகள் கப்பல்”

 

“சென்னையிலிருந்து கடலூர், நாகைக்கு பயணிகள் கப்பல்”

சென்னை -புதுச்சேரி- காரைக்கால் இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

“சென்னையிலிருந்து கடலூர், நாகைக்கு பயணிகள் கப்பல்”

இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், சாகர்மாலா திட்டத்தின் கீழ் கடலோர படகு போக்குவரத்தை மேம்படுத்த மத்திய துறைமுகம் கப்பல் நீர்வழிப் போக்குவரத்துக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, இந்த சூழலில் ரோரோ ரோபேக்ஸ் என்ற சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் சேவையை முறைப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து புதுச்சேரி, கடலூர், நாகை ,காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான முதல் கட்ட ஆலோசனை சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் ஐந்து மாதத்திற்குள் கப்பல் சேவை தொடங்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

“சென்னையிலிருந்து கடலூர், நாகைக்கு பயணிகள் கப்பல்”

வர்த்தக ரீதியிலான மத்திய அரசின் இந்த முயற்சியை விரைவில் அமல்படுத்த தனியார் நிறுவனங்களை, மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. அத்துடன் இந்த சேவை உடனடியாக தொடங்கவும் ஊக்குவித்து வருகிறது. இந்த பயணிகள் கப்பல் சேவையானது தினமும் பயணம் செய்பவர்கள், சுற்றுலா பயணிகள், சரக்கு போக்குவரத்தில் ஈடுபடுபடுபவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும்.