• April
    25
    Thursday

Main Area

Main



ஒரே மாதத்தில் கிடு,கிடுவென உயர்ந்த ஜியோ வாடிக்கையாளர்கள்...ஏர்டெல், ஐடியா, வோடபோன் நிறுவனங்கள் சரிவு!

jio
jio
Loading...

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் சுமார் 1.3 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்திருக்கின்றனர்.

இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்களின் தலையெழுத்தையே மாற்றி அமைத்தது ஜியோவின் வருகை. அதன் பின்னர் ஜியோவுக்கு போட்டியாக இதர டெலிகாம் நிறுவனங்களும் தங்களின் ரீசார்ஜ் பிளான்களை முழுவதுமாக திருத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன. நாளுக்கு நாள் ஜியோ நெட்வொர்க்கில் இணையும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ சேவையில் சுமார் 1.3 கோடி பேர் இணைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதே காலகட்டத்தில் பாரதி ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கூட்டாக சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. டிராய் வெளியிட்டிருந்த அறிக்கைபடி ஆகஸ்ட் மாதம் வரை ஜியோ நெட்வொர்க்கில் சுமார் 23.9 கோடி வாடிக்கையாளர்கள் இருந்தனர். ஆனால், செப்டம்பர் 2018 வரை நிறைவுற்ற நிதிநிலை வருவாய் அறிக்கைபடி ஜியோ நெட்வொர்க்கை தற்போது சுமார் 25.2 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர் என்று தெரிய வந்துள்ளது. அதாவது, இது ஆகஸ்ட் மாதத்தை விட 1.3 கோடி எண்ணிக்கை வரை அதிகமாகும்.

ஆகஸ்ட் மாதம் வரை 34.58 கோடி பேர் ஏர்டெல் சேவையை பயன்படுத்தி வந்த நிலையில், செப்டம்பர் மாதம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து தற்போது 34.35 கோடி பேர் ஏர்டெல் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல ஐடியா செல்லுலார் நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதம் 21.71 கோடியாக இருந்த நிலையில், செப்டம்பர் மாதம் 21.31 கோடியாக குறைந்துள்ளது. அதாவது, இந்த காலகட்டத்தில் மட்டும் சுமார் 40.61 லட்சம் பேர் ஐடியா சேவையில் இருந்து வெளியேறி உள்ளனர். மேலும், இரண்டு மாதங்களில் வோடபோன் நிறுவனம் 37.67 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.