• July
    20
    Saturday

Main Area

Main



கர்ப்பம் குறித்துக் கதறி அழுத ரேஷ்மா! சோகத்தில் பிக் பாஸ் குடும்பம்!

ரேஷ்மா
ரேஷ்மா
Loading...

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இரு நாட்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. போட்டி தொடங்கிய முதல் வாரம் நாமினேசன், எலிமினேசன் எதுவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த ஒரு வாரத்தில் யார்யார் எப்படி என்பது குறித்து அனைவரும் தெரிந்து கொள்வார்கள் என்று எதிர்பாக்கப்டுகிறது. 

நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து போட்டியாளர்களுக்கு எந்த ஒரு டாஸ்க்கும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் ஒரு அரங்கில் கூடி இருக்கின்றனர். அப்போது அவரவர் வாழக்கையில் நடந்த கசப்பான சம்பவம் குறித்து பகிர்ந்துகொள்ளுமாறு கூறப்பட்டது. 

அப்போது பேசிய ரேஷ்மா 'நான் 9 மாதம் கர்ப்பமாக இருந்த நேரத்தில் என்னுடையே குழந்தையின் இதயத் துடிப்பு நின்றுவிட்டது. அந்த இழப்பு தான் என்னால் வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாது என்று கூறி கதறி அழுதுள்ளார். உடனே சக போட்டியாளர்கள் அனைவரும் அவரை ஆறுதல் கூறி அரவணைத்தனர். 

இதை பார்த்த ரசிகர்கள் சிலர் 'எதற்காக ஆரம்பத்திலே எங்களை எப்படி அழுகை டாஸ்க் எல்லாம் கொடுக்குறீர்கள்' என்று கூறிவருகின்றனர். மற்றொரு பக்கம் இது அவர் பயன்படுத்தும் யுக்தியாகக் கூட இருக்கலாம் என்று கூறிவருகின்றனர். எது எப்படியோ இன்றைய நிகழ்ச்சி பார்த்தால் நமக்கு அனைத்தும் புரிந்து விடும்.  
 

2018 TopTamilNews. All rights reserved.