• May
    26
    Sunday

Main Area

Main



நெருப்புடன் விளையாடுகிறீர்கள்; தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Loading...

புதுதில்லி: நீதித்துறையை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் வழக்கு குறித்து விசாரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவரது அலுவலகத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான அருண் மிஸ்ரா தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.

rape

இதனிடையே, உத்சவ் பெயின்ஸ் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தலைமை நீதிபதிக்கு எதிராக மிகப்பெரிய சதி நடக்கிறது. புகார் கூறிய பெண் சார்பில் முதலில் நான் ஆஜராக விரும்பினேன். ஆனால், அஜய் என்பவர் என்னை அணுகி தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கு தொடர ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு பேரம் பேசினார். அதன் மூலம் தலைமை நீதிபதியை பதவி விலக வைப்பதே அவரது நோக்கம். எனவே, அதனை நான் மறுத்து விட்டேன் என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் நேரில் ஆஜரான உத்சவ் பெயின்ஸ், சீலிட்ட கவரில் சில ஆவணங்ககளை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, சிபிஐ இயக்குநர் டெல்லி காவல்துறை ஆணையர், மத்திய உளவுத்துறை இயக்குநர் ஆகியோர் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவர்களிடம் நீதிபதிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

ranjan gogoi

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து உள் அமர்வு விசாரணை நடத்த நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணை குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் நியமித்தது. ஆனால், தனி நபர்களை கொண்டு ஒரு சிறப்பு குழு அமைத்து சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை நடத்த வேண்டும் என பெண் வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர்.

இந்நிலையில், நீதிபதிகள் அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, கடந்த 3 , 4 ஆண்டுகளாக நீதித்துறை மீது இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை ஒருபோதும் கட்டுப்படுத்தி இயக்க முடியாது. நெருப்புடன் விளையாடுகிறீர்கள். அது உங்களது விரல்களை சுட்டு விடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

அத்துடன், நீதித்துறையை கட்டுப்படுத்தி இயக்க நினைப்பவர்களை கண்டறிய சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டை உள் விசாரணை குழு விசாரிப்பது தொடர்பாக மதியம் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிங்க

சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய பெண்: முதியவர் உள்பட 100 பேர் வன்கொடுமை செய்த கொடூரம்!

2018 TopTamilNews. All rights reserved.