• May
    21
    Tuesday

Main Area

Main



தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு பரிசு தொகை அளித்த ரோபோ சங்கர்! எவ்வளவு தெரியுமா? 

கோமதி-ரோபோ ஷங்கர்
கோமதி-ரோபோ ஷங்கர்
Loading...

சென்னை: தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீராங்கனை கோமதிக்கு நடிகர் ரோபோ ஷங்கர் ரூ.1 லட்சம் பரிசாக வழங்கியுள்ளார். 

23வது ஆசியத் தடகளப் போட்டிகள் தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற பெண்களுக்கான 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான தமிழகத்தைச் சோ்ந்த, இந்திய வீராங்கனை கோமதி மாரிமுத்து முதல் இடத்தை பிடித்துள்ளார். சுமார் 2 நிமிடம் 2.70 விநாடிகளில் 800 மீட்டர் தூரத்தைக் கடந்து சாதனை படைத்த கோமதி தமிழ்நாட்டிற்குத் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். 

gomathi

கோமதியின் வெற்றியைத் தமிழகமே கொண்டாடி வருகிறது. இவருக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  நடிகர் ரோபோ சங்கர் தங்க மகள் கோமதி மாரிமுத்துக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். 

gomathi

இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், 'தங்க மங்கை கோமதிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நானும் கஷ்டங்களை அனுபவித்து இந்த நிலைமைக்கு வந்தவன் தான். அதன் கஷ்டம் எனக்கும் தெரியும். கோமதி அவர்களுக்கு என்னுடைய சிறிய அன்பு பரிசாக ரூ.1 லட்சம் கொடுப்பதைப் பெருமையாக நினைத்துக்கொள்கிறேன். மேலும் இவருடைய வெற்றி பல பெண்களுக்கும் உத்வேகம் அளிக்கும் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார். 

மேலும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ரோபோ ஷங்கர் தால 1லட்சம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: தெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு!

2018 TopTamilNews. All rights reserved.