• May
    23
    Thursday

Main Area

Main



71 நாளில் புதிய சாதனை படைத்த தனுஷின் ரவுடி பேபி பாடல்!

ரவுடி பேபி
ரவுடி பேபி
Loading...

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் ‘மாரி 2’. இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராக நடித்திருந்தார். இவருடன் வரலட்சுமி  சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ ஷங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

rowdy baby

10 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான யுவன்- தனுஷ் காம்போவில் உருவான இப்படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தனுஷ் எழுதி பாடிய  இப்பாடலுக்கு இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். 

இந்நிலையில் மாரி 2 படத்தின் 'ரவுடி பேபி' வீடியோ பாடல் சமீபத்தில் யூடியூப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்தது. தற்போது வரை இப்பாடலை 300 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கண்டு ரசித்து வருகின்றனர். இதன்மூலம் தென்னிந்திய அளவில் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட யூடியூப் வீடியோ பட்டியலில் ‘ரவுடி பேபி’ பாடல் முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.