• May
    23
    Thursday

Main Area

Mainஜேம்ஸ் பாண்ட் - 007 ரோஜர் மூரை மயக்கிய ,ராஜஸ்தானின் ராஜ திரவங்கள்!?

மதுபானங்கள்(கோப்புப்படம்)
மதுபானங்கள்(கோப்புப்படம்)
Loading...

ராஜஸ்தான் : மாவாலின்,சந்திரஹாஸ்,கேசர் கஸ்தூரி, ஜன்மோகன் இந்த பெயர்களை படிக்கும் போது யாரோ நார்த் இண்டியா அரசியல்வாதிகளா இருக்கலாம்  என்று நினைத்தால்,ஸாரி! இவையெல்லாம் ஜோத்பூர்,ஜெய்பூர்,உதய்பூர் போல ராஜஸ்தானின் மாநிலத்தின் பெருமிதமான ராஜ திரவங்கள்! வழக்கமாக கிடைக்கும் மது வகைகள் போல் இதை டீல் பண்ண முடியாது!

ராஜஸ்தான் வெய்யிலுக்கு இந்த ராஜ திரவங்கள் தாக்குப்பிடிக்காது! அப்படியே ஆவியாகிவிடும்.ஆமாம் இவை ராஜஸ்தான் மாநிலத்தின் உள்ளூர் சரக்கு!முழுக்க முழுக்க இந்திய தயாரிப்புகள்.ரசாயன கலப்பில்லாத ராஜ போதைகள்.இதில் சந்தனம்,பால் ,குங்குமப்பூ என்று நீங்கள் எதிர்பார்க்காத சேர்மானங்கள் இருக்கின்றன.ஒவ்வொன்றாக அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
    
 1- கேசர் கஸ்தூரி

 

kesar ttn

பிறக்கும் குழந்தை சிகப்பாக பிறக்க வேண்டும்.சிவாஜி படத்து ரஜினிகாந்த் கதையாகிவிடக்கூடாது என கற்பமடைந்த பெண்கள் சாப்பிடும் குங்குமப்பூ தெரியுமா? அதன் இந்திப்பெயர்தான் கேசர்.இதை ‘ஆக்ட்டபஸி’ பட சூட்டிங்கின்போது ஜேம்ஸ் பாண்ட்.ரோஜர் மூருக்கு யாரோ அறிமுகம் செய்திருக்கிறார்கள்.மனிதன் கேசர் கஸ்த்தூரியின் ஃபேனாகி விட்டார்.

இதன் சுவையை விட தங்கத்தை உருக்கியது போன்ற இதன் நிறம்தான் அவரை அசத்திவிட்டதாம்!அதற்கு காரணம் குங்குமப்பூ! இதுதவிர பால்,தேன்,உலர் பழங்களெல்லாம் சேர்த்து காய்ச்சி வடிக்கப்பட்ட சரக்கு இது.இந்த பாரம்பரிய சரக்கை தயாரிக்கும் தொழில் நுட்பம் அறிந்தது ஏழே குடும்பங்கள்தான்.அந்த ஏழு குடும்பங்களும் அரசின் அனுமதியோடு தனித்தனி பிராண்ட் நேம்களில் கேசர் கஸ்தூர் தயாரிக்கிறார்கள். 

ஆனாலும் இது எப்போதுமே மார்க்கெட்டில் டிமாண்டான சரக்குதான்.ஹாலிவுட் ஹீரோ கொடுத்த பப்ளிசிட்டி தவிர டிராவல் அண்ட் லிவ்விங் தொலைக்காட்சி இது பற்றி  செய்த ஆவணப்படமும் உலகெங்கும் கேசர் கஸ்த்தூரின் புகழை பரப்பிவிட்டன.ஆனாலும் விலை மிகவும் குறைவுதான்.ஒரு ஃபுல்லே 1000 ரூபாய்க்குள்ளேதான் விலை!

2 -ராயல் மாவாலின்

 

royal ttn

இது ஒரு கசக்கும் அமிர்தம்.39 வகையான இடு பொருட்களில் பேரிச்சை போன்ற உலர் பழங்களே அதிகம்.ஆனாலும் இந்த பாரம்பரிய ராஜஸ்தான் சரக்கின் சுவை கசப்புதான்.முதல் முறை சுவைக்கும்வரைதான்.ஆனால்,ஒரே வினாடியில் அந்த கசப்பு மறைந்த பிறகு ஏன் இந்த ராயல் மாவாலின் இத்தனை புகழ் பெற்றிருக்கிறது என்பதை அது உங்களுக்கு புரிய வைத்துவிடும்.

பல்வேறு வாசனைகளில் கிடைக்கும் இதன் தயாரிப்பு ரகசியம் sodawas குடும்பத்தினரால் நூற்றாண்டுகளாக கட்டிக்காப்பாற்றப்படுகிறது. அதனால் தயாரிப்புப் பொருட்களின் மார்கெட் விலை நிலவரத்துக்கு ஏற்ப இதன் விலையும் அவ்வப்போது மாறுபடும்.இது ஒரு மருந்தாகவும் கருதப்பட்டு சளி,உடல் வலி போன்றவற்றை போக்க சிறிய அளவில் நீர்கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள்.ஆனால் புகழ்பெற்ற ராஜஸ்தான் கோடைகாலத்தில் நொறுக்கப்பட்ட ஐஸ் துகள்களுடன் அருந்தும் போது ராயல்.மாவாலின் சிம்மாசனம் ஏறுகிறது.

3-ராயல் ஜக்மோகன்.

 

royal 1 ttn

இது உங்களுக்கு யாராவது தொழிலதிபரையோ அரசியல் வாதியையோ நினைவூட்டக்கூடும்.ஆனால் இது ஜோத்பூர் ராஜ வம்சத்தின் பாரம்பரிய நீராகாரம்.
பல்வேறு மணமூட்டிகளுடன்,உலர் பழங்கள், மார்மலேட், வெண்ணை, பால்,குங்குமப்பூ என எதிர்பாராத பொருட்களைச்சேர்த்து ஊறல் போட்டு தயாரிக்கப்படும் ஜக்மோகன் உங்கள் பசியைத் தூண்டும்.உயர்தரமான தயாரிப்பு என்பதாலும் முழுக்க முழுக்க ஆர்கானிக் சரக்கு என்பதாலும் இதை அளவோடு பருகினால் எந்த உடல் உபாதையும் ஏற்படாது என்கிறார்கள்.கூடவே அசிடிட்டி உள்ளவர்கள் பருகக் கூடாது என்று எச்சரிக்கையும் விடுகிறார்கள்.

4-ராயல் சந்திரஹாஸ்

royal 3 ttn

ராஜஸ்தான் தயாரிக்கும் சரக்குகளிலேயே பிரபலமும் இதுதான், மலிவானதும் இதுதான்.விலை குறைவாக இருந்தாலும் இதன் சேர்க்கைகளை கேட்டால் அசந்து விடுவீர்கள்.நெல்லி மரத்துப் பட்டை,நுஸ்லி,சந்தன மரப்பட்டை, ஜாதிக்காய் என்று என்பத்தி நாலுவகையான சேர்மானங்கள் இதில் இருக்கின்றன. நாற்பது நாட்கள் வரை ஊறல் போடப்பட்டு செம்பு பாத்திரத்தில் காய்ச்சி வடிக்கப்பட்ட இந்த சரக்கை மரக் குடுவைகளில் சேமித்து வைக்கிறார்கள்.எவளவுக்கு எவளவு பழையதோ அவ்வளவுக்கு தரம்.பண்டைய ராஜபுத்திர வீரர்களின் விருப்ப பானம் இது என்கிறார்கள்.ஆனாலும் விலை மிகவும் குறைவு.ஒரு ஃபுல் பாட்டிலின் விலை 800 ரூபாய்க்கு உள்ளேதான்.

என்ன ராஜஸ்தானுக்கு கிளம்பியாச்சா !?

2018 TopTamilNews. All rights reserved.