• July
    18
    Thursday

Main Area

Main



தலைக்கு ரூ.10,000... கொட்டித் தீர்க்கப்போகும் எடப்பாடியின் ’பணமழை’ திட்டம்..!

RS-2000
RS-2000
Loading...

கடந்த 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் எந்த வார்டில் அதிகமாக வாக்கு பதிவாகி உள்ளது என்கிற தகவல்கள் சேகரிக்கப்பட்டு இலை கட்சியின் தலைமைக்கு அனுப்பி உள்ளது. அதன் அடிப்படையில் அந்த வார்டில் எந்த அதிமுக  டீம் வேலை செய்தது என்கிற லிஸ்டை எடுத்திருக்கிறார்கள். 2000

அவர்களை மட்டுமே இந்த நான்கு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவுக்கு அதிமுக தலைமை பயன்படுத்தப் போகிறது. அதுவும் ஒரு வாக்குக்கு 10 ஆயிரம் என்று சொல்கிறார்கள். அவர்களை  தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக பணப்பட்டுவாடாவில் யாரும் குறுக்குசாலும் ஓட்டக் கூடாது  என்பதற்காக இந்த ஸ்டிரிக்ட்டான தேர்வு.edappadi

மக்களவை தேர்தலுக்கு, ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீத வாக்காளர்களுக்கு தலா, 500 ரூபாய் வீதம், அ.தி.மு.க., தலைமை பணம் கொடுத்திருக்கிறது. இந்த பணத்தை, கட்சி நிர்வாகிகள் வழியாக ஓட்டுச்சாவடி வாரியாக பட்டுவாடா செய்திருக்கிறார்கள். ஆனால், நிர்வாகிகள் ஓட்டுக்கு, 200, 300 ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு மீதியை பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்கள். ops

அதிலும் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் 20 சதவீதம் வாக்காளர்களுக்கு கூட பணம் கொடுக்கவில்லை. இதனால் நான்கு தொகுதி இடைத்தேர்தலில்  பட்டுவாடா பொறுப்பை, அமைச்சர்கள் கையில கொடுத்து மக்களவை தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய மற்ற தொகுதி தொண்டர்களை அழைத்து பட்டுவாடா செய்ய இருக்கிறார்கள்.
 

2018 TopTamilNews. All rights reserved.