• July
    20
    Saturday

Main Area

Main



கணவர் முன்னாடி செம டான்ஸ், குழந்தை வளர்ப்பு பத்தி குட்டி அட்வைஸ்; சமந்தாவின் காதல் ரகசியம்?!...

நாகா - சமந்தா
நாகா - சமந்தா
Loading...

திரைத்துறை சார்ந்த காதல் ஜோடிகள் என்றாலே கருத்து வேறுபாடால் பிரிந்துவிடுவார்கள் என பொதுவெளியில் விமர்சிக்கப்படுகிறது. ஆனால் அதையும் கடந்து சில ஜோடிகள் மட்டுமே மற்றவர்கள் பொறாமை கொள்ளும் அளவு சூப்பர் ஜோடியாக வலம் வருகிறார்கள்.

சூர்யா - ஜோதிகா, பிரசன்னா - சிநேகா உள்ளிட்ட ஜோடிகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த வரிசையில் அனைவரையும் பொறாமைப்பட வைக்கும் ஜோடிதான் நாக சைத்தன்யா - சமந்தா.

samantha

கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியர், நல்ல புரிதலுடன் நிம்மதியான வாழ்க்கையை நோக்கி பயணிக்கின்றனர். சமந்தா ஒரு பேட்டியில் தங்களுக்கு சண்டை ஏற்பட்டால், ஒருவர் அருகே ஒருவர் அமர்ந்து அமைதியாக பேசிக்கொள்வோம். மற்றவர்களுக்கு நாங்கள் சண்டையிட்டுக் கொண்டது தெரியாது. இப்படி பேசித் தீர்த்துக்கொள்வதால் எங்களுக்குள் சண்டை வளர வாய்ப்பேயில்லை என கூறியிருந்தார்.

samanth

நேற்று (ஏப்ரல் 23, 2019) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் முன்னிலையில் தான் நடனமாடும் புகைப்படத்தை பதிவிட்ட சமந்தா, என் சமத்தான கணவர் தன் வாழ்க்கையை அமைதியாக வாழ்கிறார். நான் சற்று மாறுபட்டவள் என குறிப்பிட்டுள்ளார்.

samanthaa

குழந்தை வளர்ப்பு குறித்து சமந்தா, எனக்கு ஒரு குழந்தை இருந்தால், அந்த குழந்தைதான் என் உலகமாக இருக்கும். வேலைக்கு செல்லும் தாய்மார்களை நான் மிகவும் மதிக்கிறேன். என்னுடைய பால்ய காலங்கள் அவ்வளவு அழகாக இல்லை.

பால்ய காலத்தை தொலைத்த இளைஞர்களிடம் அவர்களின் பெற்றோர் சொல்வதெல்லாம், நாங்கள் அனுபவிக்காத அத்தனை சந்தோஷத்தையும் நீ அனுபவிக்க வேண்டும் என விரும்பினோம் என்பதுதான். இதனால் ஏதோ ஒன்றில் மாட்டிக்கொள்கிறோம். எனக்கு குழந்தை வந்தபின்பு சில ஆண்டுகள் குழந்தையை விட்டு பிரியவே மாட்டேன். அந்த குழந்தைதான் என் முழு உலகமாக இருக்கும் என தெரிவித்தார்.

இதையும் வாசிக்க: ’அந்த மாதிரி ஒரு படம் எடுங்கன்னு சொன்னா அந்தப் படத்தையே எடுத்துட்டீங்களே பாஸ்’...ஒரு கடைக்குட்டி தேவராட்ட சிங்கம்...

2018 TopTamilNews. All rights reserved.