• January
    20
    Sunday

Main Area

Main

சர்கார் பேனர்களை கிழித்தெறிந்த அதிமுகவினர்: வைரலாகும் வீடியோ!

sarkar
Loading...

சென்னை: சர்கார் படம் திரையிடப்பட்டிருக்கும் திரையரங்குகள் முன் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அதிமுகவினர் கிழித்தெறியும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம், முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக உருவாகியுள்ளது. படத்தின் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமியின் கேரக்டருக்கு கோமளவள்ளி என பெயரிடப்பட்டுள்ளது. அது ஜெயலலிதாவின் இயற்பெயர் ஆகும்.

அதுமட்டுமின்றி, தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்தும் சர்காரில் விமர்சிக்கிப்பட்டிருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுக தொண்டர்கள், தமிழகம் முழுவதும் சர்கார் திரையிடப்பட்டிருக்கும் திரையரங்குகள் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சில காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை காசி திரையரங்கு முன் குவிந்த அதிமுகவினர், விஜய் பேனர்களை கிழிக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.