• January
    20
    Sunday

Main Area

Main

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சர்கார் படக்குழு ஒப்புதல்: திருப்பூர் சுப்ரமணியன் தகவல்

sarkar vijay
Loading...

சென்னை: சர்காரில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு சம்மதம் தெரிவித்திருப்பதாக திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம், முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக உருவாகியுள்ளது. படத்தின் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமியின் கேரக்டருக்கு கோமளவள்ளி என பெயரிடப்பட்டுள்ளது. அது ஜெயலலிதாவின் இயற்பெயர் ஆகும்.

அதுமட்டுமின்றி, தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்தும் சர்காரில் விமர்சிக்கிப்பட்டிருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுக தொண்டர்கள், தமிழகம் முழுவதும் சர்கார் திரையிடப்பட்டிருக்கும் திரையரங்குகள் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சில காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாக திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி திருப்பூர் சுப்ரமணியன் தற்போது தெரிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.