• July
    20
    Saturday

Main Area

Main



வைகோவுக்கு எம்பி பதவி வழங்க கூடாது: சசிகலா புஷ்பா போர்க்கொடி!

 வைகோ-சசிகலா புஷ்பா
வைகோ-சசிகலா புஷ்பா
Loading...

புதுடெல்லி: தேச துரோக வழக்கில் குற்றவாளியான வைகோவை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்க அனுமதிக்கக்கூடாது என சசிகலா புஷ்பா போர்க்கொடி தூக்கியுள்ளார்.

vaiko

கடந்த  2009ஆம் ஆண்டு  விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கருத்துக்களைப் பேசியதாக அவர் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த தண்டனை ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திமுக சார்பில் வழங்கப்பட்ட வாய்ப்பின் அடிப்படையில் வைகோ மாநிலங்களவை எம்பியாகிறார். 

sasikalapushpa

இந்நிலையில்  சசிகலா புஷ்பா சபாநாயகரும், குடியரசுத் துணைத்தலைவருமான வெங்கய்யா நாயுடுக்கு எம்.பி. சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளார். அதில்,  சட்டப்படி ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரால் தேர்தலில் போட்டியிடத் தடையில்லை என்றாலும், தேச விரோத கருத்துக்களைப் பேசும் வைகோவை கோவில் போன்ற நாடாளுமன்றத்தில் அனுமதிக்கக் கூடாது. பிரதமருக்கு எதிராக பேசி வரும் வைகோ அவரை தமிழர்களுக்கு எதிரானவராகச் சித்தரித்து வருகிறார். எந்த குற்றத்திற்காக நீதிமன்றம் தண்டனை விதித்ததோ, அதை பொருட்படுத்தாமல் ஊடகங்களில் தான் தொடர்ந்து அதே செயலை செய்வேன் என்றும் கூறிவருவது  நீதித்துறையை அவமதிப்பதாகும். எனவே, அறநெறிகளுக்கு உட்பட்டு, வைகோ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கை நாட்டுக்கு எதிராகவும், நாட்டின் பிரதமருக்கு எதிராகவும் பேசுவோருக்குத் தகுந்த பாடமாக அமையட்டும்' என்று   குறிப்பிட்டுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.