• March
    24
    Sunday

Main Area

Main



சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கணவர்: பழனியில் நடந்த கொடூரம்!

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Loading...

பழனி : 12 வயது சிறுமியைத் தாயின் 2வது இரண்டாவது கணவன் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள்:

பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சார்ந்த 12 வயது சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். திடீரென்று சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால்,  சிறுமியின் பெற்றோர் பழனி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஆறுமாதம்  கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் பழனி  ஆட்சியர் அருண் ராஜுக்குத் தகவல் கொடுக்க, ஆட்சியர் காவல்துறையினர் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

சிறுமியை வன்கொடுமை செய்த தந்தை:

இவ்விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுமியின் தாய் மாரியம்மாளின் இரண்டாவது கணவன் காமராஜன் தான் சிறுமியின் கர்ப்பத்திற்குக் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.  நீண்ட நாட்களாக அவன் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளான் எனக்கூறப்படுகிறது. 

போக்சோ சட்டத்தில் கைது:

இதுதொடர்பாக காமராஜன் மீது வழக்குப்பதிவு செய்த  அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர், அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

2018 TopTamilNews. All rights reserved.