எந்த காலத்தில் யாருடனும் கூட்டணி கிடையாது; தனித்தே போட்டி- சீமான்

 

எந்த காலத்தில் யாருடனும் கூட்டணி கிடையாது; தனித்தே போட்டி- சீமான்

தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளாக அதிமுக., திமுக இருந்து வருகின்றன. தேர்தல் சமயங்களில் இவர்கள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவார்கள். மத்தியிலும், வட மாநிலங்களிலும் பெரிதாகப் பேசப்படும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட ஏதாவது ஒரு கட்சியோடு கூட்டணி சேரத்தான் முயற்சி செய்வார்கள். அந்த அளவிற்கு அதிமுகவும், திமுகவும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற கட்சிகளாகத் திகழ்கின்றன. இந்நிலையில் எந்த காலத்தில் யாருடனும் கூட்டணி கிடையாது; தனித்தே போட்டியிடுவோம் என சீமான் தெரிவித்துள்ளார்.

எந்த காலத்தில் யாருடனும் கூட்டணி கிடையாது; தனித்தே போட்டி- சீமான்

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் அலுவலகத்தில் திலீபனின் 33வது நினைவுதினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “நாம் தமிழர் கட்சி தேர்தலில் தனித்து தான் போட்டியிடும், பாதிக்கு மேல் வேட்பாளர் நியமித்து கலத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்கள். கொரோனா பாதிப்பு காரணமாக காலதாமதம் ஏற்பட்டு இருக்கிறது, இல்லை என்றால் முழுவதுமாக வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பார்கள். நான் வீழ்ந்தாலும் தமிழ் வாழ வேண்டும் என்று நினைத்தவர்கள் தற்போது தமிழ் விழுந்தாலும் நான் வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழ் ஈழம், தமிழ் தேசியம் என்று பேசியவர்கள் தற்போது அதற்கு எதிரானவர்கள் உடனே கூட்டணி வைத்து இருக்கிறார்கள். அதனால்தான் தற்போது அவர்களால் தமிழ் தேசியம் தமிழ் ஈழம் பற்றிப் பேச முடியாமல் எடுக்கிறார். எந்த காலத்தில் திமுக, அதிமுக, பிஜேபி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்ள மாட்டோம்” எனக் கூறினார்.