• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

கர்ப்பமாக இருக்கும் மனைவிக்காக சென்ராயன் என்ன செய்தார் தெரியுமா?

senrayan

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அப்பாவி போட்டியாளராக மக்கள் மனதில் இடம்பிடித்த சென்ராயன், கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

பிக் பாஸ் வீடில் வெகுளித்தனமான போட்டியாளர் என்ற பெயரை பெற்ற சென்ராயனின் மனைவி கயல்விழி பிக் பாஸ் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்து தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சென்ராயனிடம் தெரியப்படுத்தினார். அந்த செய்தியைக் கேட்டதும் தலைகால் புரியாமல் மகிழ்ச்சியில் சென்ராயன், ‘நான் அப்பா ஆயிட்டேன் டா…’ என்று துள்ளி குதித்தது அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தது.

senrayan

இந்நிலையில், நடிகர் சென்ராயன் தனது மனைவியின் நீண்ட நாள் சமீபத்தில் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார். சென்ராயனின் மனைவி கயல்விழி ‘புன்னகை இளவரசி’ நடிகை சினேகாவின் தீவிர ரசிகையாம். ஒருமுறையாவது சினேகாவை நேரில் பார்க்க வேண்டும் என்பது கயல்விழியின் ஆசை என சென்ராயனே ஒரு முறை கூறியிருக்கிறார்.

senrayan

இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் தனது மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நடிகை சினேகாவை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து, மனைவியை சினேகாவின் வீட்டிற்கு கூட்டிச் சென்றிருக்கிறார். சினேகா கயல்விழியுடன் அன்பாக பேசி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார்.

             
2018 TopTamilNews. All rights reserved.