• April
    24
    Wednesday

Main Area

Main



சிக்கலை சந்திக்கும் பாஜக; கட்சியிலிருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள்: அதிர்ச்சியில் மோடி&கோ

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா
Loading...

அருணாச்சலப் பிரதேசம் : மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  அருணாச்சலப் பிரதேச பாஜகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலர்   அக்கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

மக்களவை மற்றும்  சட்டப்பேரவை தேர்தலானது சிக்கம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி நடைபெறவுள்ளது. பாஜக தலைமையோ அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் 60 இடங்களில் 54 இடங்களுக்கான வேட்பாளர்களைக்  கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

அதிருப்தி அடைந்த பாஜக நிர்வாகிகள்

 

ஆனால்  இந்த முறை தேர்தலில் ஏற்கெனவே போட்டியிட்ட பலருக்கு  வாய்ப்பு மறுக்கப்பட அதிருப்தி அடைந்த பாஜக நிர்வாகிகள் 25-க்கும் மேற்பட்டோர்  பாஜகவிலிருந்து விலகியுள்ளனர். இதில் குறிப்பாக, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பாஜகவின் பொதுச்செயலாளர் ஜர்பும் காம்பின், உள்துறை அமைச்சர் வெய், சுற்றுலாத்துறை அமைச்சர் ஜார்கர் காம்லின் உள்ளிட்ட 6 எம்எல்ஏக்கள் விலகியுள்ளது பாஜகவினர் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தனித்து நிற்கும் தேசிய மக்கள் கட்சி
arunachala pradesh ttn

இந்நிலையில் பாஜகவிலிருந்து விலகிய முக்கிய பிரமுகர்கள் கான்ராட் சங்மாவின், தேசிய மக்கள் கட்சியில்(என்பிபி)  இணைந்துள்ளனர். மேகாலயாவில் பாஜகவுடன் இணைந்து தேசிய மக்கள் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில்,  அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜகவுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதால்,  இங்கு தேசிய மக்கள் கட்சி தனித்து நிற்கும் முடிவை எடுத்துள்ளது. 

காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு 
rahul

பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்களில்,   காங்கிரஸ் கட்சி செல்வாக்கு பெற்றிருந்த நிலையில்,  கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால்  தேர்தல் நேரத்தில் பாஜகவுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது, காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.