• July
    17
    Wednesday

Main Area

Main



ஆந்திராவை அதிரவைத்த பாலியல் வன்கொடுமை… அதிரடி காட்டுவாரா புது முதல்வர்..!?

ஜெகன் ரெட்டி
ஜெகன் ரெட்டி
Loading...

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றத்திலிருந்து பல அதிரடிகளைச் செய்து அரசியல் அரங்கை அதிரவைத்துக்கொண்டிருக்கிறார். அவர்,ஆட்சிக்கு வந்தபிறகு 16 வயது சிறுமியை ஆறு பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்முறை செய்த சம்பவம் ஆந்திரா முழுவதையும் கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கிறது.

jaganmohan reddy

தலைநகர் அமாராவதியிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஓங்கோல் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பஸ்ஸுக்காக காத்திருந்திருக்கிறார். வெகு நேரமாகியும் பஸ் வரவில்லை என்று தெரிகிறது.அதைக் கவனித்த ஒரு இளைஞன் அந்தப் பெண்ணிடம் பேச்சுக்கொடுத்திருக்கிறான்.வெள்ளந்தியாகப் பேசிய சிறுமி,பேச்சு வாக்கில் தனது நண்பன் ஒருவரது பெயரைச் சொல்லியிருக்கிறார்.
 

sexual

அந்தப் பையனை எனக்கு நல்லாவே தெரியும்,வா நான் கொண்டு போய் ட்ராப் பண்ணுகிறேன் என்று சொன்னதைக் கேட்டு,சிறுமியும் அவனோடு பைக்கில் போயிருக்கிறார்.போகும் போது ஏதோ காரணம் சொல்லி தனது ரூமுக்கு அந்தச் சிறுமியை அழைத்துப் போன அந்த இளைஞன்,தனது நண்பர்களையும் அங்கு வரவழைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.தப்பிக்க முயற்சித்த பெண்ணை அறைக்குள் தள்ளிப் பூட்டி வைத்து ஐந்து நாட்கள் இது போல் சித்தரவதை செய்திருக்கிறார்கள்.
 
ஆள் இல்லாத நேரத்தில் அங்கிருந்து தப்பி வந்த சிறுமி அருகிலுள்ள பஸ் ஸ்டாப் அருகே நின்று அழுது கொண்டிருந்ததைப் பார்த்த ஒருவர்,எதனால் அழுகிறாய் என்று கேட்ட போதுதான் நடந்த அநியாயத்தை அச்சத்தோடும்,அழுகையோடும் சொல்லியிருக்கிறார் அந்தச் சிறுமி.
 
உடனடியாக போலிஸுக்கு தகவல் தெரிவித்ததும்,அவர்கள் வந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய பரிசோதனையும்,சிகிச்சையும் கொடுத்திருக்கிறார்கள்.அப்போது,அந்தச் சிறுமி சொன்ன அடையாளங்களை வைத்து,குற்றவாளிகள் ஆறு பேரையும் கண்டு பிடித்து போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைந்திருக்கிறார்கள்.
 

arrested

இந்த சம்பவம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு போயிருப்பதால்,இதன் பிறகு பாலியல் குற்றங்கள் செய்ய பயப்படும் அளவுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று ஆந்திர மக்கள் எதிர் பார்க்கிறார்கள். என்ன செய்யப்போகிறார் புது முதல்வர்.

2018 TopTamilNews. All rights reserved.