• May
    21
    Tuesday

Main Area

Main



சாய்னா நேவால் பயோபிக்: பாதியில் விலகிய ஷ்ரத்தா கபூர்: இது தான் காரணமாம்?!

சாய்னாவுடன் ஷ்ரத்தா
சாய்னாவுடன் ஷ்ரத்தா
Loading...

மும்பை: சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இருந்து நடிகை ஷ்ரத்தா கபூர் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பரினீதி சோப்ரா நடிக்கிறார்.

சாய்னா நோவலின் பயோபிக்:
sharadha ttn

பேட்மின்டன் சாம்பியனான சாய்னா நோவலின் வாழ்க்கை கதை சினிமாவாகி வருகிறது. இயக்குநர் அமோல் குப்தே இயக்கும் இந்தப் படத்தில் சாய்னாவாக பாலிவுட்  நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பைக் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடிகர்  பிரபாஸ் ஐதராபாத்தில் தொடங்கி வைத்தார். முன்னதாக பிரபாஸ் ஷ்ரத்தாவுடன் இணைந்து சாஹோ படத்தில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பாதியில் நின்ற படப்பிடிப்பு:
sharadha ttn

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, ஸ்ரத்தாவுக்கு டெங்குகாய்ச்சல்  ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. இதையடுத்து ஏப்ரல் மாதம் இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து ஷ்ரத்தா விலகியுள்ளார். 

விலகிய ஷ்ரத்தா:
kapoor ttn

ஷூட்டிங் செட்யூல் மாற்றி மாற்றி அமைக்கப்பட்டதால், இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாமல் அவர் விலகியதாக ஷ்ரத்தா தரப்பில் கூறப்பட்டுள்ளது.  

களமிறங்கிய பரினீதி சோப்ரா:
chopra ttn

இதையடுத்து சாய்னா நேவால் கதாபாத்திரத்தில் பரினீதி சோப்ரா நடிக்கிறார். இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் புஷன் கூறும்போது, 'இந்த ஆண்டின் இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்து அடுத்த வருடம் ரிலீஸ் செய்யவுள்ளோம். கால்ஷீட் பிரச்னை காரணமாக ஸ்ரத்தாவால் இதில் தொடர முடியவில்லை' என்றார்.

இது குறித்து கருத்து கூறியுள்ள பரினீதி சோப்ரா, 'இப்படியொரு வாய்ப்பு கிடைத்தது பெருமை. படத்துக்காக பேட்மின்டன் பயிற்சி எடுக்க இருக்கிறேன். இதன் படப்பிடிப்பை ஆவலாக எதிர்பார்க்கிறேன்' என்றார்

2018 TopTamilNews. All rights reserved.