• June
    27
    Thursday

Main Area

Main



அதிக சம்பளம் கேட்டு அடம்பிடிக்கும் செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி ஜோடி!? உண்மையில் இவர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி
செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி
Loading...

சென்னை:  செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி தம்பதி மேடை நிகழ்ச்சிகளுக்கு அதிக சம்பளம் கேட்டு முரண்டு பிடிப்பதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.  

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்கள்  ஜோடி செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி தம்பதி. இவர்கள் கலந்துகொண்ட இந்த போட்டி நிகழ்ச்சியில்  நாட்டுப்புறப் பாடல்கள் பாடி ஏராளமான ரசிகர்கள் மனத்தை வென்றார்கள். இதை தொடர்ந்து படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.  மேலும் செந்தில் கணேஷ் ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இதனால் நாளுக்கு நாள் இந்த தம்பதிகளின் மவுசு எகிறி வருகிறது. குறிப்பாக உள்ளூர் மட்டுமல்லாது வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும்  இவர்கள் கலந்து கொண்டு பட்டையைக் கிளப்புகின்றனர். 

senthil


 இந்நிலையில் பிரபலமானதைத் தொடர்ந்து இவர்கள் அதிகம் சம்பளம்  கேட்டு முரண்டு பிடிப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள செந்தில் கணேஷ், ஒரு கச்சேரிக்கு நாங்க வாங்கும் சம்பளம் ஒரு லட்சம். அதுவும் அது எங்களுக்கு மட்டுமில்ல. எங்க குழுவுல  இருக்குற எல்லாருக்குமே தான். இது கூட வாங்கலைன்னா அப்புறம் எப்படிங்க வண்டிய  ஓட்டுறது' என்று பதிலளித்துள்ளார். 

anitha

முன்னதாக இவர்கள் குறித்து கருத்து தெரிவித்த புஷ்பவனம் குப்புசாமி - அனிதா இருவரும், 'செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி ஜோடி பேசுவது எல்லாம் இரட்டை அர்த்தமும், ஆபாச வார்த்தையும் தான். இதை எல்லாம் யூடியூப்பில் பார்த்து நொந்து போனேன். இவர்களைப் பார்க்கும்போது பாடுவதை நிறுத்திவிடலாமா என்று கூட யோசனை வந்தது' என்று சாடினர் . ஆனால்  அவர்கள்  குற்றச்சாட்டுக்குச் செந்தில் கணேஷ் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.